ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி -தமிழக அரசு அறிவிப்பு
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி
-தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 2021இல் கட்டுப்பாடுகளுடன்
(ஜ)சல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு
நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு அனுமதி
அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

300 மாடுபிடி வீரர்கள், 50% வரை
பார்வையாளர்களுடன் (ஜ)சல்லிக்கட்டு
உள்ளிட்ட போட்டிகளை நடத்தலாம்
என்றும் மாடுபிடி வீரர்கள் அரசால்
அங்கீகரிக்கப்பட்ட மையத்தில்
”கொரோனா இல்லை” என சான்று
பெற்றிருக்க வேண்டும் எனவும்
உத்தரவிட்டுள்ளது.
புதிய கொரோனா வைரஸ்முதல்வர் ஆலோசனை – ஜனவரி
மாதம் ஊரடங்கு?
பிரிட்டனில் உருமாறிய வீரியமிக்க
கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல்
தடுப்பது குறித்து வரும் 28ஆம்
தேதி முதல்வர் பழனிசாமி மருத்துவ
நிபுணர்களுடன் ஆலோசனை
நடத்துகிறார்.
ஆலோசனைக்குப் பின்னர்
புதிய தளர்வுகள் அல்லது ஜனவரி
மாதம் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு
அமல்படுத்தலாம் என்று தகவல்
தெரிவிக்கின்றன.
பங்குச்சந்தைகள் உயர்வுடன்
தொடக்கம்
வாரத்தின் 3வது நாளான இன்று
பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
தற்போதைய
நிலவரப்படி சென்செக்ஸ் 118.89
புள்ளிகள் அதிகரித்து 46,125.58
புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை
குறியீட்டு எண் நிஃப்டி 28.80 புள்ளிகள்
உயர்ந்து 13,495.10 புள்ளிகளாகவும்
வர்த்தகம் நடைபெற்று வருகிறது.