அய்யய்யோ பொங்கல் பரிசு ரூ. 2500 கிடைக்காதா?- ஷாக்
அய்யய்யோ பொங்கல் பரிசு ரூ.
2500 கிடைக்காதா?- ஷாக்
பொங்கல் பரிசு ரூ.2500 வழங்குவதற்கான
டோக்கன் இன்று முதல் 30ம் தேதி
வரை வீடு, வீடாக சென்று விநியோகம்
செய்யப்படவுள்ளது. பொங்கல் பணம்
ரூ.2500 ஜன.4ம் தேதி முதல் 13ம்
தேதிக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜன.4ம் தேதிக்குள்
கூட்டுறவு, ரேஷன் கடை ஊழியர்களின்
ஊதிய உயர்வு அறிவிப்பை தமிழக அரசு
அறிவிக்க வேண்டும். இல்லையென்றால்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காமல்
புறக்கணிப்போம் என்று ரேஷன் கடை
ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதனால்,
பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளது.