கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாக உள்ள அருணாச்சல பிரதேசத்தில் பாஜக பெற்ற வாக்கு % எத்தனை தெரியுமா? இனி யாராவது பாஜக மதவாத கட்சி என கூறமுடியுமா?
கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாக உள்ள அருணாச்சல பிரதேசத்தில் பாஜக பெற்ற வாக்கு % எத்தனை தெரியுமா? இனி யாராவது பாஜக மதவாத கட்சி என கூறமுடியுமா?
கிறிஸ்தவர்கள் 30%, இந்துக்கள் 29 % போலோ பழன்குடியினர் 29% வசிக்கும் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர், இம்மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கடந்த 26-ம் தேதி வெளியானது.
இதன் முடிவுகள் மிகுந்த ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது பாஜக உள்ளாட்சி தேர்தலில் 73.6 சதவீத வாக்குகளை கைப்பற்றியுள்ளது அருணாச்சல் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 8,215 கிராம பஞ்சாயத்து இடங்களில் 7,717 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் பாஜக 6,062 இடங்களிலும், சுயேட்சைகள் 892 இடங்களிலும், காங்கிரஸ் 388 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 199 இடங்களிலும், ஜனதா தளம் 148 இடங்களிலும், அருணாச்சல் மக்கள் கட்சி 28 இடங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ளன.
மேலும் 242 மாவட்ட சபை தேர்தலில் 228 மாவட்ட சபைக்கான முடிவுகள் வெளியாகின. இதில் பாஜக 179 இடங்களில் வெற்றி பெற்று மாபெரும் சாதனை படைத்தது. சுயேட்சைகள் 20 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் தலா 10 இடங்களில் வெற்றி பெற்றன.
மேலும் தேசிய மக்கள் கட்சி 6 இடங்களிலும், அருணாச்சல் மக்கள் கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.இடாநகர் மாநகராட்சி தேர்தலில் பாஜக மொத்தம் உள்ள 20ல் 10 இடங்களை கைப்பற்றியுள்ளது.( இங்கு 20 இடங்களிலும் கிறிஸ்துவர்கள் 70% இருப்பது குறிப்பிடத்தக்கது ) மொத்தமாக பதிவான வாக்குகளில் 73.7 சதவீத வாக்குகளை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகம் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிக வாக்குகளை இடங்களை கைப்பற்றி முதலிடம் பிடித்தது, அதே போல் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை மக்களாக உள்ள வடகிழக்கு மாநிலத்தில் பாஜக இமாலய வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில் பாஜக மதவாத கட்சி என்ற முத்திரை அடியோடு நீங்கியுள்ளது.
சீன எல்லையை ஒட்டிய அருணாச்சல பிரதேச மக்கள் தங்கள் பாதுகாப்பிற்கு காங்கிரஸ் கட்சியை காட்டிலும் பாஜக ஆட்சியில் சிறப்பாக இருப்பதாக உணர்ந்த காரணத்தால் இப்போது பாஜகவிற்கு வாக்குகளை மத வேறுபாடு இன்றி அளித்ததாகவும், போலோ பழங்குடியினர் பாஜகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக கூறப்படுகிறது.