அனைத்து மாவட்ட பக்தர்களுக்கும் அனுமதி
அனைத்து மாவட்ட
பக்தர்களுக்கும் அனுமதி
நாளை முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா
தரிசன உற்சவம் நடைபெற உள்ளது.
அங்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா
சான்று கட்டாயம் இல்லை எனவும்
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை
என்ற அடிப்படையில் 200 பக்தர்களுக்கு
அனுமதி வழங்க வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அனைத்து
மாவட்ட பக்தர்களும் பங்கேற்கலாம்
என சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு,
பள்ளிகள் திறப்பு? முக்கிய
தகவல்
டிச., 31-ந் தேதியுடன் தமிழகத்தில்
ஊரடங்கு முடியும் நிலையில், மாவட்ட
ஆட்சியர்கள், மருத்துவ குழுவினருடன்
முதல்வர் பழனிசாமி தலைமை
செயலகத்தில் காணொலி காட்சி மூலம்
இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
உருமாறிய கொரோனா அச்சம் காரணமாக கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா?
வேண்டாமா? என்பது குறித்தும்,
பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்க
வாய்ப்புள்ளது. தற்போதுள்ள சூழலில்
ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும்,
பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை
திறக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இன்றைய ராசி பலன்கள்…!!
மேஷம் – நன்மை, ரிஷபம் – ஆதாயம்,
மிதுனம் – போட்டி, கடகம் – புகழ்,
சிம்மம் – லாபம், கன்னி – தாமதம்,
துலாம் – முயற்சி, விருச்சிகம் – வெற்றி,
தனுசு – ஆதரவு, மகரம் – பரிசு,
கும்பம் – நிம்மதி, மீனம் – உயர்வு.