32 பேருக்கு ஒருவர் பாஜக அதிரடி வியூகம் 60 % பணிகள் முடிவுடைந்தது!!!
32 பேருக்கு ஒருவர் பாஜக அதிரடி வியூகம் 60 % பணிகள் முடிவுடைந்தது!!!
தமிழக தேர்தல் களத்தில் பாஜக அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா? இடம் பெறதா என கேள்விகள் விவாதங்கள் ஊடகங்களில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது ஆனால் சத்தமில்லாமல் பாஜக தனது வாக்கு வங்கியை அதிகரிக்க புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. தமிழகத்தில் பாஜக வாக்கு வங்கி நிரூபிக்கப்பட்ட வகையில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றது.

அதனை 4 மடங்காக உயர்த்தும் வகையில் 32 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் எனவும் அந்த பொறுப்பாளர் 32 பேரில் 16 நபர்களை பாஜகவிற்கு வாக்கு அளிக்கும் விதமாக மாற்றவும் வியுகம் அமைக்கப்பட்டுள்ளது, இந்த பொறுப்பாளர் மத்திய அரசு வழங்கும் முத்ரா கடன் திட்டம், பெண்களுக்கான வங்கி கடன், காஸ் மானியம், முதல் வீட்டிற்கு மத்திய அரசு வழங்கும் 2.5 லட்சம் நிதி உதவி, விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய். ரேஷன் கடைகளில் வழங்கும் பொருள்களில் மத்திய அரசின் பங்கு
என பல திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கின்றனர், அத்துடன் இதுவரை மத்திய அரசின் திட்டங்களால் பயன் பெற்றவர்கள் குறித்தும், மேலும் சிலரின் தேவைகள் குறித்தும் அந்த பொறுப்பாளர்கள் கணக்கெடுத்து அவர்களுக்கு மேலே உள்ள மாவட்ட தலைமைக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொள்கின்றனர், இந்த பணியில் இளைஞர்கள், மகளிரை அதிக அளவில் பயன்படுத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.
இந்தியாவிலேயே முத்தரா திட்டத்தின் மூலம் அதிக அளவு பயன் பெற்றவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிட தக்கது,
மாநில தலைமை உத்தரவுப்படி தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். தேர்தல் பணியை பாஜக தொடங்கியுள்ள நிலையில் இதுவரை மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் பயன்பெற்றோரின் பட்டியலை தயார் செய்து அவர்கள் குடும்பத்தினர் வாக்குகளையும் பெற்றாலே 8% வாக்குகள் உறுதி என பாஜக கணக்கிட்டுள்ளது.
ஜனவரி மாதம் பாஜக தேசிய தலைவர் நட்டா தமிழகம் வர இருக்கும் சூழலில் தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விரைவில் பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகம் வர இருப்பதாக நமக்கு பிரத்தியேக தகவல்கள் கிடைத்துள்ளன.