நிறைமாத கர்ப்பிணி அனுஷ்கா – வோக் அட்டைப்படத்தில்…
நிறைமாத கர்ப்பிணி அனுஷ்கா –
வோக் அட்டைப்படத்தில்…
கர்ப்ப காலத்தில் பெண்கள் பேஷன்
ஆடைகளை அணிய முடியாது என்ற
எழுதப்படாத விதியை இந்தியாவில்
உடைத்தவர் நடிகை அனுஷ்கா ஷர்மா.
அவரின் கர்ப்பகால ஆடைகளுக்கு
பெரும் வரவேற்பு கிடைத்தது.

மேலும்,
ஆசனங்கள் செய்தும் அசத்தினார்.
இந்நிலையில், 2021ம் ஆண்டு ஜனவரி
மாத வோக் (VOGUE) அட்டையில்
அனுஷ்கா இடம்பெற்றுள்ளார்.
புதிய தொடக்கம் என்று குறிப்பிட்டு
போட்டோவை இன்ஸ்டாவில்
பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகள்
ஜனவரி 4ஆம் தேதி முதல்
பள்ளிகள் திறப்பு!
புதுச்சேரியில் ஜனவரி 4ஆம் தேதி முதல்
பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி,
வழிகாட்டு நெறிமுறைகள்
வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 1
முதல் 12ஆம் வகுப்பு வரை காலை
10 மணி முதல் மதியம் 1 மணி வரை
பாடங்கள் நடத்தப்படும்.
மாணவர்கள்
கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
தனிமனித இடைவெளியை கட்டாயம்
கடைப்பிடிக்க வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு 10 மணி மேல் பைக்
ஓட்டினால் – எச்சரிக்கை
சென்னையில் கொரோனா
பரவாமல் தடுப்பதற்காக புத்தாண்டு
கொண்டாட்டத்துக்கு காவல்துறை கடும்
கட்டுப்பாடு விதித்துள்ளது. சென்னையில்
உள்ள கடற்கரைகள், சாலைகள், பார்கள்,
ஓட்டல்கள் அனைத்தும் இன்றிரவு 10
மணியுடன் மூடப்படும்.
பைக் ரேஸை
தடுக்கும் விதமாக முக்கிய மேம்பாலங்கள்
மூடப்படும். தடையை மீறினால்
வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
என்று போலீஸ் எச்சரித்துள்ளது.