ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!
ஜனவரி 4ஆம் தேதி முதல்
பள்ளிகள் திறப்பு!
புதுச்சேரியில் ஜனவரி 4ஆம் தேதி முதல்
பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி,
வழிகாட்டு நெறிமுறைகள்
வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 1
முதல் 12ஆம் வகுப்பு வரை காலை
10 மணி முதல் மதியம் 1 மணி வரை
பாடங்கள் நடத்தப்படும்.

மாணவர்கள்
கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
தனிமனித இடைவெளியை கட்டாயம்
கடைப்பிடிக்க வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு 10 மணி மேல் பைக்
ஓட்டினால் – எச்சரிக்கை
சென்னையில் கொரோனா
பரவாமல் தடுப்பதற்காக புத்தாண்டு
கொண்டாட்டத்துக்கு காவல்துறை கடும்
கட்டுப்பாடு விதித்துள்ளது. சென்னையில்
உள்ள கடற்கரைகள், சாலைகள், பார்கள்,
ஓட்டல்கள் அனைத்தும் இன்றிரவு 10
மணியுடன் மூடப்படும்.
பைக் ரேஸை
தடுக்கும் விதமாக முக்கிய மேம்பாலங்கள்
மூடப்படும். தடையை மீறினால்
வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
என்று போலீஸ் எச்சரித்துள்ளது.