Flash News: பொங்கல் பரிசு – தமிழக அரசு புதிய அறிவிப்பு…
Flash News: பொங்கல் பரிசு –
தமிழக அரசு புதிய அறிவிப்பு…
தமிழகத்தில் வழங்கப்படவுள்ள பொங்கல்
பரிசு தொகுப்பு தொடர்பாக தகவல் மற்றும்
புகார் ஏதேனும் இருந்தால் 044-2766240
என்ற மாவட்ட கட்டுப்பாட்டு
அறை தொலைபேசி எண் மூலம்
தொடர்புக்கொள்ளலாம் என நுகர்வோர்
பாதுகாப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசு டோக்கன் குறித்த
புகார் இருந்தாலும் தெரிவிக்கலாம் என
கூறியுள்ளது.
மேலும் சில செய்திகள் :
வேள்பாரி நாவலுக்கு விருது!
எழுத்தாளரும், மதுரை எம்.பியுமான சு.
வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன்
வேள்பாரி நாவல் அனைத்துலக சிறந்த
படைப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதை மலேசிய நிலநிதி கூட்டுறவு
சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம் அறிவித்துள்ளது.
மேலும் சில செய்திகள் :
அஜித்துக்கு டிடிவி வாழ்த்து…
இந்திய அளவில் திரைத்துறையில் சிறந்த
பங்களிப்பை வழங்கியவர்களுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்த் திரையுலகை சேர்ந்த அஜித்குமார்,
பார்த்திபன், தனுஷ், ஜோதிகா, அனிருத்
ஆகியோருக்கு டிடிவி தினகரன் பாராட்டு
தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில்
தமிழகம் பெருமைப்படத்தக்க மேலும்
பல சாதனைகளை அவர்கள் புரிந்திட
வேண்டுமென வாழ்த்துகிறேன் எனவும்
தெரிவித்துள்ளார்.