தியேட்டர்களில் 100% அனுமதிக்கு எதிராக மனு

தியேட்டர்களில் 100%
அனுமதிக்கு எதிராக மனு

தமிழகத்தில் திரையரங்குகள் 100% திறக்க
அனுமதி அளித்து அரசு அரசாணை
பிறப்பித்தது. இதனை ரத்து செய்யக்கோரி
மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

100% அனுமதி
அளித்தால் தொற்று அதிகமாக பரவ
வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவாக தாக்கல் செய்துள்ளதால் நாளை
விசாரணை நடைபெறுகிறது.

மேலும் சில செய்திகள் :

குறைந்த தங்கம், வெள்ளி விலை

சென்னையில் காலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.640 சரிந்து ரூ.38,440-க்கும்,
கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.4,805-க்கும்
விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட்
தங்கத்தின் விலை சவரன் ரூ.41,512-க்கும்,
கிராம் ரூ.5,189-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.03 காசு
குறைந்து ரூ.74.07க்கும், கிலோ ரூ.
74,070-க்கும் விற்கப்படுகிறது.

மேலும் சில செய்திகள் :

Breaking: மாஸ்டர், ஈஸ்வரன்
படங்கள் ரிலீஸ் ஆகாது?
பரபரப்பு தகவல்

திரையரங்குகளில் 100% ரசிகர்களின்
அனுமதிக்கு எதிரான வழக்கை அவசரமாக
விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
தெரிவித்துள்ளது. இந்நிலையில், 100%
ரசிகர்களுக்கு அனுமதி என்ற உத்தரவை
திரும்ப பெற்றால் மாஸ்டர் படம்
மட்டுமே வெளியிடப்படும் என திருப்பூர்
சுப்ரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.

100% இருக்கை அனுமதியை குறைத்தால்
ஈஸ்வரன் படம் வெளியிடப்படாது.
மாஸ்டர் படம் வெளியாகாமல் போனால்
மட்டுமே ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களை
பற்றி யோசிப்போம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami