புதிய விலை உயர்வு அறிவிப்பு
புதிய விலை உயர்வு அறிவிப்பு
மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்கள்
விலையை 1.9% வரை உயர்த்தி
அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு
மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப
ரூ.4,500 முதல் ரூ.40,000 வரை விலை
உயர்கிறது.

இந்த புதிய விலை உயர்வு
டிச.,1 முதல் ஜன., 7 வரை முன்பதிவு
செய்தவர்களுக்கும் பொருந்தும்.
மேலும், சமீபத்தில் அறிமுகம்
செய்யப்பட்ட மஹிந்திரா தார் விலையும்
உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் சில செய்திகள் :
அஸ்வகந்தாவை இப்படி சாப்பிட்டால் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் வரவே வராது……
*1 டீஸ்பூன் அஸ்வகந்தா தூளை
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில்
கலந்து காலையில் வெறும் வயிற்றில்
குடிக்க, உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள்
இருக்கும்.
*வேப்பம் பொடி, வெந்தயம்
பொடி, நாவல் பழக்கொட்டை பொடி
மூன்றையும் சம அளவு எடுத்து, ஒரு
டீஸ்பூன் பட்டை பொடியையும் சேர்த்து,
தினமும் சாப்பிடுவதற்கு அரைமணி
நேரத்திற்கு முன்பு அரை டீஸ்பூன் அளவு
வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க
சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
மேலும் சில செய்திகள் :
இதய நோய் குறைக்கும்
வைட்டமின் டி
கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்
டி ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து.
இது இதய நோய் மற்றும் சுவாசக்
கோளாறுகளின் அபாயத்தை குறைக்கிறது.
சூரிய ஒளியில் இருந்து பெறப்படும்
வைட்டமின் டி அதிக நன்மை
பயக்கக்கூடியது. தவிர, ஆரஞ்சு பழச்சாறு,
மஷ்ரூம், முட்டையின் மஞ்சள் கரு,
பால், ஓட்ஸ் உள்ளிட்ட உணவுகளிலும்
வைட்டமின் டி அதிகம் உள்ளது.