பூக்களின் மருத்துவ குணங்கள்…
பூக்களின் மருத்துவ குணங்கள்…
ஆவாரம் பூவை நீரில் கொதிக்க வைத்து
குடித்து வந்தால் சர்க்கரை நோய்
கட்டுக்குள் இருக்கும். வேப்பம்பூவை நீரில்
கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில்
உள்ள நோய்த்தொற்றுகள், கிருமிகளை
அழித்துவிடும்; சளி, இருமலையும்
போக்கும்.

செம்பருத்தி பூவை கொதிக்க
வைத்து குடித்தால் உடல் சூடு தணியும்.
தினமும் ஒரு செம்பருத்தி பூவை
அப்படியே சாப்பிட்டு வந்தால், இரத்தக்
குறைபாடு பிரச்சினை உள்பட பல உடல்
பிரச்சினைகளை சரி செய்யும்.
மேலும் சில செய்திகள் :
5 நாட்களுக்கு மழை!
கிழக்கு திசை காற்றலைகளால் 5
நாட்களுக்கு தென்தமிழக மாவட்டங்களில்
மழை பெய்யும் என சென்னை வானிலை
மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்றும்
வீசும் என்பதால் மன்னார் வளைகுடா,
குமரி கடலுக்கு மீனவர்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும்.
வடதமிழகம்
மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில்
2 நாட்களுக்கு காலை நேரங்களில்
லேசான பனிமூட்டம் காணப்படும் என
கூறியுள்ளது.
மேலும் சில செய்திகள் :
நம்ம CHENNAI-ல் தமிழ்
அவமதிப்பு
மெரினாவில் வைக்கப்பட்டுள்ள “நம்ம
CHENNAI” செல்ஃபி மையம் அடையாள
சின்னமாக தெரியவில்லை. மாறாக நம்
தாய் மொழியை அவமதிக்கும் சின்னமாக
நம்ம CHENNAI வைக்கப்பட்டுள்ளது என்று
வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
உலகத்தின்
இணைப்பு மொழிதான் ஆங்கிலமே தவிர,
தமிழுடன் கலப்பில் பிணையும் மொழி
அல்ல என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.