நாடாளுமன்ற நேரலையில் தயாநிதிமாறனை வெளுத்து எடுத்த தேஜஸ்வி சூர்யா!

நாடாளுமன்ற நேரலையில் தயாநிதிமாறனை வெளுத்து எடுத்த தேஜஸ்வி சூர்யா!

நாடாளுமன்ற கூட்ட தொடர் தொடங்கினால் அதில் திமுக உறுப்பினர்கள் ஒருவராவது பாஜக உறுப்பினர்களிடம் சிக்கி சின்னா பின்னமாவது தொடர்கதையாக மாறிவருகிறது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்த விவாதத்தின் போது கனிமொழி கருத்திற்கு லடாக் எம்.பி கொடுத்த பதில் இந்திய அளவில் பிரபலமானது.

அதன் பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆ ராசாவிற்கு கொடுத்த பதில் என காரசார விவாதங்கள் நடந்துள்ளன இந்நிலையில் நேற்று திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் மக்களவையில் கேள்வி எழுப்பினார் அப்போது கொரோனா தடுப்பூசியை முதலில் குடியரசு தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் போட்டுக்கொள்ள வேண்டும் என கத்தி பேசினார்.

இதற்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம். பி தேஜஸ்வி சூர்யா கொடுத்த பதிலடியில் ஒட்டுமொத்த திமுகவின் மானமே மாநிலங்களவையில் பறிபோகும் சூழல் உண்டானது, திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் இந்திய தடுப்பூசுகளின் நம்பகதன்மை குறித்து கேள்வி எழுப்பினார், பிரதமர் முன்பே கூறிவிட்டார் முதலில் தடுப்பூசிகள் மருத்துவர்கள், முன் கள பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டுமே போடப்படும்.

புதிய இந்தியாவில் முன் கள பணியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெளிவாக கூறிவிட்டார் ஒரு வேலை இது பழைய இந்தியாவாக இருந்தால் தயாநிதி மாறன், அவரது தாத்தா, பாட்டி, அவருக்கு தாத்தா, ஸ்டாலின், உதயநிதி என ஓடி சென்று தங்கள் உயிரை காப்பாற்ற முதலில் தடுப்பூசி போட்டு இருப்பார்கள் என அவர் பதில் கொடுக்க அரங்கமே அதிர்ந்து விட்டது.

உலக நாடுகளே இந்தியாவின் தடுப்பூசி சிறந்தது என தங்கள் நாடுகளுக்கு ஆர்டர் செய்து வருகின்றன, உலக சுகாதார அமைப்பு இந்தியாவின் தடுப்பூசி சிறந்தது என பாராட்டு தெரிவித்துள்ளது, அப்படி இருக்கையில் தயாநிதி மாறன் போன்றோர் சந்தேகத்தை எழுப்புவது அரசியலுக்காக என விமர்சனங்கள் எழுந்துள்ளன, தன்னை விட இரண்டு மடங்கு வயதில் சிறியவரிடம் தயாநிதி மாறன் பதிலடி பெற்ற சம்பவம் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami