2019 – தேர்தலில் வெற்றிபெற போவது யார் பாண்டே சொல்லிய 4 முக்கிய தகவல்கள்

ரங்கராஜ் பாண்டே சாணக்யா என்ற இணையவழி ஊடகம் ஒன்றை துவங்கி அதை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட 40 தொகுதிகளிலும் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று ஒரு பேட்டியொன்றை அளித்திருந்தார் அதில் அவர் சில முக்கிய தகவல்களை கூறியுள்ளார்.

1) இந்த தேர்தலின் முடிவில் பாஜக தான் தனி பெரும் கட்சியாக அதிக இடங்களை வெல்லும் ஆனால் ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்கள் கிடைக்குமா அல்லது அதிகமாக கிடைக்குமா என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் தெரியவரும்.

2 ) கடந்த முறையை போல காங்கிரஸ் 50 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியடையாது இந்த முறை கணிசமான அளவில் 100 முதல் 150 தொகுதிகளில் வெல்லலாம் என்றும் சொல்லி இருக்கிறார்.

இதையும் படிக்க:  கல்லூரியில் நடக்கும் இந்து ஆன்மீக கண்காட்சியில் கிருஸ்தவர்கள் " பிட் நோட்டீஸ் "

3 ) தமிழகத்தில் அதிமுக , திமுக ஆகிய கூட்டணிகள் வாக்கு அடிப்படியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மூன்றாவது இடத்தை டிடிவி தினகரனின் அமமுகவும் , நான்காவது இடத்தை கமலின் மக்கள்நீதி மையமும் , ஐந்தாவது இடத்தை நாம் தமிழர் கட்சியும் பிடிக்கும் என்றும் சொல்லி இருக்கிறார்.

4 ) இந்த தேர்தலின் சிறந்த சாணக்கியன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காரணம் அம்மா இறந்த பிறகு கட்சியே அழிந்து விட்டது என்று நாம் நினைத்த நிலையில் கட்சியை காப்பாற்றி தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து
சிதறி சென்ற அதிமுக வாக்குகளை மீண்டும் ஒன்றுசேர்த்து மீண்டும் அதிமுகவை உயிர்ப்பித்து

இரண்டாவது தேர்தலுக்காக அவர்கள் அமைத்த கூட்டணி கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் 40 – தொகுதியிலும் திமுக தான் வெல்லும் என்று அனைவரும் நினைத்த நிலையில்

இதையும் படிக்க:  யாருக்கு எத்தனை தொகுதி கிடைக்கும் தேர்தலுக்கு பிறகு பாண்டே வெளியிட்ட தகவல் !

அவற்றை பொய்யாக்கி ஒரு மிகப்பெரிய கூட்டணியை கட்டமைத்து அதில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கொண்டுவந்து வெற்றி கனவை கலைத்தார் எடப்பாடி.

இவ்வாறு அந்த பேட்டியில் ரங்கராஜ் பாண்டே 2019- ம் ஆண்டு தேர்தல் நிலவரம், அரசியல் கூட்டணிகள் குறித்து தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

©TNNEWS24

Loading...