5 மாநில தேர்தலுக்காக மோடி பெட்ரோல் விலையை குறைத்தார் என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் கரியை பூசிய மோடி !

5 மாநில தேர்தலுக்காக மோடி பெட்ரோல் விலையை குறைத்தார் என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் கரியை பூசிய மோடி

டெல்லி

கடந்த 5 மாதங்களுக்கு முன்னாள் சரியாக சொல்லபோனால் கடந்த அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 88.37 காசுகளுக்கு விற்பனையானது.

இதற்கு கட்சா எண்ணெய் விலை உயர்வு , வளைகுடா நாடுகளுக்குள் நிலவிய பனிப்போர் ,முந்தைய அரசு வாங்கிய கடன் என பல காரணம் இருந்தாலும் , இந்த விலைஉயர்வை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த எதிர்க்கட்சிகள் மோடி அரசு மீது பழியை தூக்கி போட்டது

இந்த நிலையில் தான் பெட்ரோல் விலை குறைய துவங்கியது அதற்கு எதிர்க்கட்சிகள் சொன்னது 5 மாநில தேர்தலை மனதில் வைத்து தான் மத்திய அரசு விலையை குறைகிறது என்று,

இதையும் படிக்க:  திமுக சொம்புனே பேரை மாத்தவேண்டியதானே தந்தி டிவி இல்லை தொந்தி டிவி கிழித்து தொங்கவிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி.

ஆனால் தேர்தல் முடிந்த பிறகும் தொடர்ந்து குறைந்த பெட்ரோல் விலை குறைந்தபட்சமாக 71.45 ரூபாய்க்கு வந்தது..

அதன் பின்னர் கடந்த 20 நாட்களாக 72 முதல் 74 ரூபாய் என்ற விகிதத்தில் ஏற்ற இறக்கத்தில் உள்ளது.

எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல தேர்தலுக்காக அரசு விலையை குறைக்கிறதா அப்படி அரசால் விலையை குறைக்க முடியுமா ?

முடியும் அதை தான் முந்தைய காங்கிரஸ் அரசு செய்தது சந்தையில் கச்சா எண்ணை விலை உயரும்போது , கோடி கணக்கான ரூபாய் வரிப்பணத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியமாக கொடுத்து விலையை கட்டுக்குள் வைக்கலாம் ஆனால் அப்படி செய்தால் அது மக்களுக்கு தற்காலிக உதவியாக இருக்குமே தவிர , கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகும்.

இதையும் படிக்க:   வெள்ள  நிவாரண பணிகளில் ஈடுபட்டதற்கு பணம் கேட்கவில்லை இராணுவம். பினராயி விஜயனின் அடுத்த பொய் அம்பலம் !

அதனால் அப்படி செய்யாத மத்தியஅரசு வேறு வழியை தேர்ந்தெடுத்தது அது ஈரானிடம் இந்தியா ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவது

உலகநாடுகள் கண்டு நடுங்கும் அமெரிக்காவை எதிர்த்து ஈரானிடம் டாலர் பரிவர்த்தனையை முறித்து இந்திய ரூபாயின் மூலம் கச்சா எண்ணெய் வாங்கியது

மேலும் இந்திய முழுக்க பலஇடங்களில் கச்சா எண்ணை சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தியது மோடி அரசு , இவை அனைத்திற்கும் மேலாக பெட்ரோல் உற்பத்திசெய்யும் நாடுகளின் சர்வாதிகாரத்தை ஒடுக்க , உலகின் அதிக கட்சா எண்ணெய் இருக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா மற்றும் சீனா இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி நெருக்கடி கொடுத்தது.

மத்தியஅரசு எடுத்த இந்த முடிவுகளால் பெட்ரோல் விலை கட்டுக்குள் வந்தது , இவை அனைத்திலும் குறிப்பிடத்தக்கது இவை அனைத்துமே தொலைநோக்கு திட்டங்கள் , அதனால் இந்த அரசு தேர்தலை தாண்டி நாட்டின் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் அளிக்கிறது என்பது தெளிவாகியுள்ளது.

இதையும் படிக்க:  சிவனையும் அபிநந்தனையும் அவமானப்படுத்திய பனிமலர் நீக்கவில்லை என்றால் தொலைக்காட்சியை புறக்கணிப்போம் எச்சரிக்கை.

ஆனால் சில ஊடகங்களும் அரசியல் கட்சியினரும் மக்கள் மனதில் பொய் செய்தியை பரப்பினர் ஆனால் இன்று அது பொய் செய்தி என்று நிருபணம் ஆகிவிட்டது.

©TNNEWS24

Loading...