9 பேரையும் தூக்கில் போட சொல்லி ஒற்றை காலில் நிற்கும் தமிழகம். பெண்களின் வாழ்க்கையில் அரசியல் செய்யும் திமுகவினர்.

பொள்ளாச்சி

தமிழகத்தில் பல பெண்களின் வாழக்கையை சமூகவலைத்தளங்களின் மூலம் பழகி சீரழித்த கும்பலை தமிழக காவல்துறை கைது செய்துள்ள நிலையில் அவர்கள் பெண்களை எவ்வாறு தங்கள் பாலியல் இச்சைக்கு பலி கொடுத்தார்கள் என்ற வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக ஒற்றை குரலில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நாய்களை பாரபட்சம் இன்றி தூக்கில் போடவேண்டும் என்று ஒரு சேர குரல் கொடுத்துவரும் நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் சமூக வலைத்தளங்களில் பலர்.

பெண்களின் பெயர்களை வெளியிட்டும் பலரது அந்தரங்க தகவல்களை பொது வெளியில் கொட்டி தீர்த்துவிட்டனர் இந்த சூழலில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டுமே தவிர பெண்கள் பற்றிய தகவல்களை வெளியில் சொல்லி அவர்களுக்கு மேலும் தண்டனை வாங்கித்தர நினைக்க கூடாது.

இதையும் படிக்க:  ஓங்கி ஒரு அடி கொடுத்தா சரியா போயிடும் செய்தியாளர் சந்திப்பில் தினகரன் பேசியது....

ஆனால் ஒரு சில அரசியல் கட்சிகள் இதிலும் தங்கள் சுயலாபத்திற்காக ஆளும் கட்சியை விமர்சனம் செய்வதற்காக பெண்களை பலிகடாய் ஆக்க முயல்வது பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது அனைவரும் ஒன்றிணைந்து குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வாங்கி தரவேண்டுமே தவிர தங்கள் அரசியல் லாபத்திற்காக பெண்களின் வாழ்வில் விளையாடுவது வெட்கி தலைகுனியவேண்டிய செயல் ஆகும்.

©TNNEWS24

Loading...