உடுமலை கவுசல்யா வேலை பறிபோக காரணம் இவர் தான்.வெளியானது உண்மை தகவல்..!

1

உடுமலை பேட்டை பகுதியை சேர்ந்த கல்லுரி மாணவி கவுசல்யா அதே கல்லுரியில் படித்த சங்கர் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின்னர் கவுசல்யாவின் கணவர் சங்கர் உடுமலைபேட்டையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் , இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட கவுசல்யாவிற்கு மத்தியஅரசு பணி வழங்கப்பட்டது.

இதனை அடுத்து உதகை குன்னூர் வெலிங்கடனில் உள்ள ராணுவ கன்டோன்மென்டில் இளநிலை எழுத்தராக கவுசல்யா பணிக்கு சேர்ந்தார்.

திராவிடர் கழகத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்த கவுசல்யா பறை இசை கலைஞரான சக்தி என்பவரை மறுமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

இதன் பின்னர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கவுசல்யா இந்தியாவின் மீது எப்போதுமே நம்பிகை இல்லை என்பது போன்று இந்தியாவிற்கு எதிரான சில கருத்துக்களை கூறினர். இதனை தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி கவுசல்யாவை கன்டோன்மென்ட் நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியது.

இதையும் படிக்க:  சத்தமில்லாமல் உயிர் இழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு 21 கோடி நிதி அளித்த - ஈஸா

கவுசல்யா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் விவரம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன்தான் கன்டோன் மென்ட் நிர்வாகத்திற்கு புகார் அனுப்பியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கன்டோன்மென்ட் நிர்வாகம் கவுசல்யாவை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

தற்போது கவுசல்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது ஏன் என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. கவுசல்யா அளிக்கும் விளக்கம் திருப்தியாக இல்லை என்றால் அவர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்படுவார்.

இதனால் கவுசல்யாவின் மீது கடுப்பில் இருந்த பலரும் கொங்கு ஈஸ்வரன் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

©TNNEWS24

………………………………….
சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

இதையும் படிக்க:  2.0 படத்திற்கு ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

1 COMMENT

  1. ஏன் இவருக்கு அந்த பெண் செய்தால் இந்த கேணத்தனமான ஆரசியல் ஒன்றுக்கும் உதவாது .சாதியை வளர்ப்பது இறையாண்மை இவள் நொந்து போய். நாட்டை மீது கோபம் கொண்டால் தவறா? Cantonment அறிவாளி இயக்குனர் அந்த அரசியல்வாதிக்கும் உறவு. இவள் வாழவும். கூடாது வளரவும் கூடாதா முட்டாள் விடங்கடா அந்த பெண்ணை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here