எங்கள் தலைவரை வையாபுரி என்று அசிங்கபடுத்திவிட்டார் நிர்மலா கடும் கோபத்தில் மதிமுகவினர்

0

எங்கள் தலைவரை வையாபுரி என்று அசிங்கபடுத்திவிட்டார் நிர்மலா கடும் கோபத்தில் மதிமுகவினர்

டெல்லி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.

தமிழகம் (திருப்பூர் ) வரும் பிரதமர் மோடி அவர்களுக்கு கருப்பு கொடி காட்டுவேன் என்று வைகோ சொல்லி வரும் நிலையில் திடீரென நிர்மலா சீதாராமனை சந்திப்பது பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளன.

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேசியதாக பலரும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து வருகிறார்கள் ஆனால் பாஜகவினரோ தானாக முன் வந்து வைகோ ஆதரவு தெரிவித்தாலும் வேண்டாம் என மருத்துவிடுமாறு டெல்லிக்கு தந்தி அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

நிர்மலா சீதாராமனை பொறுத்தவரை தன்னை சந்திக்க வருபவர்களின் சந்திப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுவிடுவார் அதன்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை… வையாபுரி கோபால்சாமி என்று வைகோவின் இயற் பெயரை சொல்லி குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க:  அமெரிக்காவிலிருந்து 6.7 கோடியை வீரமரணமடைந்த ராணுவவீரர்களுக்காக தனியாக வசூல் செய்த இளைஞர்..!

தீவிர பெரியார் பக்தனான வையாபுரி கோபாலசாமி இனி எனது பெயரை அனைவரும் வைகோ என்றே அழைக்கவேண்டும் வையாபுரி என்று அழைக்க கூடாது என்று திமுகவில் என்று பயணத்தை தொடர்ந்தாரோ அன்றே அறிவித்துவிட்டார்.

அப்படி இருக்கையில் நிர்மலா சீதாராமன் வைகோவினை வையாபுரி என்று குறிப்பிட்டது அவரது தொண்டர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ஆனால் பாஜகவினரோ வைகோ விடம் ஒட்டோ உறவோ வைத்துக்கொள்ள வேண்டாம் என்று இப்போதே டெல்லிக்கு அவசர கடிதம் அனுப்ப தயாராகிவிட்டனர்.

(வைகோ பவர் அப்படி )

©TNNEWS24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here