மதத்தை யார் வேண்டுமானாலும் பரப்பலாம் தொப்பியை தொட்டால் வெட்டத்தான் செய்வார்கள் ராமலிங்கம் கொலையை நியாயப்படுத்தி விடுதலை சிறுத்தை அறிக்கை.

2

மதத்தை யார் வேண்டுமானாலும் பரப்பலாம் தொப்பியை தொட்டால் வெட்டத்தான் செய்வார்கள் ராமலிங்கம் கொலையை நியாயப்படுத்தி விடுதலை சிறுத்தை அறிக்கை.

சென்னை

சமீபகாலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பாஜகவிற்கும் பாமாவிற்கும் எதிராக செயல்படுவதாக எண்ணி மக்கள் மத்தியில் தன்னை இந்து மத விரோதியாக அடையாள படுத்துகிறது.

பொன்மணிக்கவேலை கைது செய்யவேண்டும், நடிகர் அஜித்தை சிறையில் தள்ளவேண்டும் என்பதில் தொடங்கி தற்போது ராமலிங்கம் அவர்களின் படுகொலையை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது விடுதலை சிறுத்தைகள்.

திருமாவளவனின் வலதுகரமாக செயல்படும் வன்னியரசுதான் இப்போது ராமலிங்கம் கொலையை நியாயப்படுத்தியும் அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும் பாஜக மற்றும் பாமகவினை விமர்சனம் செய்தும் கொலை செய்தவர்களை சகோதரர் என்றும் அரவணைத்துள்ளார்கள்.

வன்னி அரசு வெளியிட்ட முழு அறிக்கையினை இங்கு அப்படியே பதிவு செய்கிறோம்.

ராமலிங்கம் படுகொலையும்
ராமதாசின் அரசியலும்
……………………………………….
கும்பகோணம் ராமலிங்கம் படுகொலையை யாரும்
ஞாயப்படுத்திட முடியாது.
கொலைக்குற்றவாளிகள் என்று சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
உண்மையான குற்றவாளிகள்
தண்டிக்கப்பட வேண்டும்.
இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஆனால், இந்த படுகொலைக்கும் முன்னும் பின்னும் உள்ள அரசியல் மிக மோசமான பயங்கரவாத அரசியலாக இருப்பதை யாரும் பேச மறுக்கிறார்கள்.
கும்பகோணம் மற்றும் திருபுவனம் பகுதியில் மதமாற்றம் செய்ய வந்ததாகவும் அதை தடுக்க வந்த ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதாகவும்
அவசரம் அவசரமாக அறிக்கை வந்தது.

இதையும் படிக்க:  ப்ரோக்கரே, தரித்திர தலைவனே வைகோ வரும் வழிமுழுவதும் போஸ்டர் ஒட்டிய பாஜக அதிர்ந்து போன வைகோ செய்த காரியம்...!

யாரிடமிருந்து?

வாழ்நாள் முழுக்க சாதிவெறியை ஊட்டி அரசியல் செய்து வரும் ராமதாசிடமிருந்து தான் இந்த
அறிக்கை வந்தது.

காவல்துறையின் விசாரணை துவங்கும் முன்பே விசாரணையை எந்த கோணத்தில் விசாரணை போகவேண்டும் என்பதற்கான அறிக்கையாகத்தான் ராமதாசின் அறிக்கை அமைந்தது.
அவரது அறிக்கையை கையில் எடுத்துக்கொண்டு காத்திருந்த வெறிநாயை போல,
பாஜக எச்.ராஜா போன்றோர் இப்போது இசுலாமியர்களுக்கு எதிராக
தமது ‘வன்ம நஞ்சை’கக்கி வருகிறார்கள்.

ராமலிங்கம் இசுலாமிய தோழர்களிடம்்இடைமறித்து
‘கலாட்டா’ செய்வதை அந்த வீடியோவில் பார்த்தவர்களுக்கு புரியும்.
இசுலாம் மார்க்கம் தொடர்பான துண்டறிக்கைகள்,திருக்குர்ரானோடு
இருக்கிறார்கள். ராமலிங்கம் இசுலாமியர்களின் ‘தொப்பியை’ அநாகரீகமாக பறித்து மாட்டிக்கொள்கிறார்.
மேலும், திருநீறை எடுத்து இசுலாமியர்களின் நெற்றியில் பூசுகிறார்.
இத்தகைய ரவுடித்தனத்தை செய்ய ராமலிங்கத்துக்கு
யார் அனுமதித்தது?

இதையும் படிக்க:  அமெரிக்கா நாட்டை சேர்ந்தவருடன் இணைந்து ஸ்டெர்லைட்டை மூட சதி திட்டத்தில் ஈடுபடும் போலி சமூக ஆர்வலர்கள் ஆதாரத்துடன் சிக்கினர்.

இந்த இந்திய கண்டத்தில் மத பரப்புரைகளுக்கோ, மத தழுவலுக்கோ
எந்த தடையும் இல்லை.
அது தான் சனநாயகம்.
தனிநபரின் மத நம்பிக்கையை பொறுத்தது. ஆனால், படுகொலைக்குள்ளான ராமலிங்கத்தின் செயல் மற்ற மதத்தவரின் நம்பிக்கைக்கு எதிரானதாகும். மத வெறியோ,
மத திணிப்போ தான் தவறாகும்.
அந்த வீடியோவில் அப்படி எந்த திணிப்பும் இல்லை.
ஆனால் ராமலிங்கம் இசுலாமியர்களிடம் மிக மோசமாக நடந்துள்ளார்.
இதை யாரும் சுட்டிக்காட்ட மறுக்கிறார்கள்.
படுகொலையை கண்டிப்பது போல,
ராமலிங்கத்தின் ரவுடித்தனத்தையும் கண்டிப்பது தான் சரியான பார்வையாக இருக்க முடியும்.

சமீபகாலமாக,
இந்துத்துவ வெறியர்கள்
தேவாலயத்தில் புகுந்து பாதிரிமார்களை அடிப்பது, கிறித்தவர்களின் புனித நூலான பைபிளை எரிப்பது,
பாதிரிமார்களை இழுத்து வந்து திருநீறு பூசுவது போன்ற ரவுடித்தனங்களை செய்து வருகிறார்கள்.
இப்படி செய்வதற்கு இந்த
‘இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு’
யார் அதிகாரம் தந்தது?
இதை யாரும் கண்டிக்க மாட்டார்களா?
பிரச்சனைகளுக்கு முன்னதாகவே
கண்டறிந்து சரி செய்ய வேண்டாமா?

ஆனால், இதையெல்லாம் வசதியாக
மறைத்து விட்டு பேசுகிறார் ராமதாசு.
அவரிடம் ஏற்கனவே ஊறிப்போயிருக்கிற
சுயநல சாதிவெறி இப்போது மதவெறியை தூண்டும் விதமாக அறிக்கை விடுகிறார். கொஞ்சம் கூட எந்தவித சமூகப்பொறுப்பும் இல்லாமல் வன்முறையை தூண்டி சேரிகளை தீக்கிரையாக்கிய ராமதாசு இப்போது முஸ்லீம் குடியிறுப்புகளை நோக்கி தீவட்டிகளை தூக்கி பிடிக்கிறார்.
இதற்கு எச்.ராஜா போன்ற கும்பல்
துனையாய் இருப்பது காத்திருந்த
வேட்டைநாய்களின் மன நிலை தான்.
சாதிவெறியும் மதவெறியும்
கூட்டு சேர்ந்து சமூக அமைதியை
சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடவே
இந்த கொலையை பயன்படுத்துகிறார்கள்.
இசுலாமிய சகோதரர்கள் இந்த
குச்சிகொளுத்தி ராமதாசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
– வன்னி அரசு
8.2.219

இதையும் படிக்க:  இயேசு உன்னை தேர்வில் வெற்றி பெற செய்தால் நீ யேசுவிற்கு என்னக்கொடுப்பாய் ?பள்ளிமாணவர்களை மதமாற்ற போகும் மோஹன் சி லாசரஸ் …

உலகில் தனது அரசியல் லாபத்திற்காக இப்படி ஒரு அறிக்கையை திருமாவளவன் வன்னி அரசின் மூலம் வெளியிட்டு தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளார். இதற்கான எதிர்வினையை நிச்சயம் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் மட்டுமல்ல அதன் கூட்டணிக்கட்சிகளும் தமிழகம் முழுவதும் சந்திக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

©TNNEWS24

2 COMMENTS

  1. டேய், பரதேசி நாயே! இஸ்லாமியர்கள் பகுதிக்கு இந்துக்கள் பகவத் கீதை எடுத்துக் கொண்டு போனாலே வெட்டி கொல்லப்படுவார்கள். இந்த லட்சணத்தில் அவர்களின் மதமாற்ற முயற்சிக்கு ஆதரவாக அறிக்கை விடுவியா? கேடுகெட்டவனே!

  2. வன்னியரசு சொன்னது முற்றிலும் உண்மையே அண்ணன் திருமா பொது நல சிந்தனை உடையவர் ராமலிங்கம் இவ்வாறு கலவரம் செய்ய தூண்டியது யார் அதன் பிண்ணணி எது இதற்கெல்லாம் விடை தெரியாமல் இராமதாசு அவசரமாக அறிக்கை விட காரணம் என்ன பாமக சிபிஐ விசாரணை கோராதது ஏன் கொலைக்கி அண்ணன் வன்னியரசு நியாயம் படுத்த அறிக்கை விடல இதன் உண்மையை அறிய வேண்டும் அப்பாவிகள் பாதிக்க கூடாது என்பதே விசிகவின் நிலைபாடு நாம் மதசார்பற்ற நாட்டுல சனநாயக நாட்டில் வாழ்ந்துக் கொண்டியிருக்கின்றோம் அதை மறுக்க முடியாது முஸ்லிம் நம் சகோதர்கள். இவ்வளவு பிரச்சினைக்கும் அடிதளம் விசாரணையில் தெரிய வரும் இப்படிய பட்ட பதிவு போட்டு வசிக நற் பெயரை கலகம் படுத்த துடிக்கும் உங்கள் எண்ணம் நெருப்பில் தான் எரியும் இவ்வாறான நடுநிலையில்லாத பதிவு போட்டு கேவலமான சிந்தனையை வெளிபடுத்தாதீர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here