தீரன் சின்னமலைக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி..!

0

By : SSR

நேற்று தொழில் மாநகராம் திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.

அப்போது திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சார்பில் மேக் இன் இந்தியா திட்டம் உள்ளிட்ட திட்டங்களை குறிக்கும் வகையில் கண்ணாடி பெட்டியில் பின்னலாடைகளை வைத்து மோடிக்கு பரிசாக அளித்தனர்.

மேலும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தேங்காய் கொப்பரை உற்பத்தியாளர்கள் சார்பில் வெள்ளி தேங்காய் பரிசளிக்கப்பட்டது.

பின்னர் தனது உரையை துவங்கிய மோடி இந்த திருப்பூர் மண் சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தேச பற்று மிகுந்த மண்.

மேலும் தீரன் சின்னமலை பிறந்த மண் இந்த திருப்பூர் மண் , இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு வீரம் மிகுந்தவராக விளங்கியவர் தான் இந்த தீரன் சின்னமலை.

இதையும் படிக்க:  ஏற்றிவிட்ட ஏணியை திமுக சொல்லி வேல்முருகனுக்காக உடைக்கலாமா? ராஜேஸ்வரி பிரியா

தீரன் சின்னமலையின் வீரத்தை பார்த்து வெள்ளையர்களே பயந்துஓடினர் ,அப்படி பட்ட ஒரு வீரன் பிறந்து வாழ்ந்த மண்ணில் நான் நிற்பது எனக்கு பெருமையளிக்கிறது.

என்று கூறி தீரன் சின்னமலையை பெருமைப்படுத்தினார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

இதற்கு கொங்கு பகுதி மக்கள் பலரும் பிரதமர் ஒருவர் தீரன் சின்னமலை அவர்களின் பெருமையை எடுத்து கூறியதற்கு பலரும் தங்கள் நன்றிகளை சமூகவலைத்தளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

©TNNEWS24

…………………………..

சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

இதையும் படிக்க:  ரஜினி அஜித் ரசிகர்களுக்கு இடையே கொளுத்திபோடு பரபரப்பாக இயங்கும் திமுக ஐடி செல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here