எடப்பாடி ஆட்சியை கவிழ்த்துவிட்டு திமுகவிற்கு வா மந்திரி பதவி.. தம்பிதுரை பின்னணியில் ஸ்டாலின்

0

டெல்லி

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துறையின் செயல்பாடுகள் தற்போது ஊடகங்களில் அதிகம் இடம்பெறுகின்றன, இதற்கு காரணம் தம்பிதுரை மத்திய அரசிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதே.

அதிமுக ஆட்சி தற்போது EPS -OPS தலைமையில் வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டை நோக்கி நகர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறது, விரைவில் இந்த அரசு கவிழ்ந்து விடும் என்று பலரும் ஜோசியம் சொல்ல ஆனால் இன்றுவரை பயணித்து கொண்டுதான் இருக்கிறது.

அதிமுக அரசிற்கு முன்பு இருந்த எதிர்ப்புகள் தற்போது குறைந்து வருகின்றன இதற்கு காரணம் ஆசிரியர்கள் போராட்டத்தை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது, கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசியம் இல்லாதவை இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:  கொங்கு பகுதி மக்களுக்கு ஒரு நற்செய்தி 1652 கோடி செலவில் நிறைவேறுகிறது அத்திக்கடவு அவிநாசி திட்டம்

தற்போது ஆட்சி எப்படியாவது கவிழ்ந்து விடும் என்று எண்ணிய ஸ்டாலினுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மாறாக அவர் எடப்பாடி பதவி விலக வேண்டும் என்று சொன்னால் மக்கள் சிரிக்கும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.

எனவேதான் அதிமுக மற்றும் மத்திய அரசிற்கு இடையே நல்ல உறவு இருக்கும் வரை நிச்சயம் அதிமுக அரசை கவிழ்க்க முடியாது என்பதை தெரிந்துகொண்டு இப்போது தம்பிதுரையை வைத்து மத்திய அரசிற்கு எதிராக பேச வைத்தால் நிச்சயம் எடப்பாடிக்கு எதிராக மத்திய அரசை திருப்பி எப்படியும் எடப்பாடி பழனிசாமியை வீட்டிற்கு அனுப்பி விடலாம் என்று எண்ணி இருக்கிறார்கள்.

இந்த பேச்சு வார்த்தை கனிமொழி மூலம் நடைபெற்று வருவதாகவும் அதிமுக உள்ளே இருந்தே அதிமுகவை சிதைக்க வேண்டும் அதற்கு பரிசாக வரும் சட்டமன்ற தேர்தலில் தம்பி துறைக்கு எடப்பாடி பழனிசாமி வசமுள்ள பொதுப்பணி துறையை ஒதுக்குவதாகவும், தேர்தல் செலவை கவனித்து கொள்வதாகவும் பேசி இருக்கிறார்கள்.

இதையும் படிக்க:  நண்பன் கொடுத்த பொங்கலை சாப்பிட்ட 8 வயது மகனை அடித்து வெளுத்த அக்பர் அலி

இதற்கு தம்பிதுரையும் சம்மதிக்க அதனால்தான் இப்போது மோடிக்கு எதிராக கடுமையாக பேசி வருகிறாராம் தம்பிதுரை மேலும் கொங்கு ஈஸ்வரனை திமுக கூட்டணிக்குள் கொண்டுவர தம்பிதுரை பாடுபடுவதாகவும் அது ஏறத்தாழ நிறைவேறிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

அதனால்தான் தம்பிதுரை பேசுவதை எல்லாம் கனிமொழி வரவேற்று நல்லமனிதர் தம்பிதுரை என்று பேசுகிறாரா?

எடப்பாடி ஆட்சியை கவிழ்ப்பாரா இல்லை தம்பிதுரை கவிழ்வாரா என்று வரும் காலங்களில் தான் தெரியவரும்.

©Tnnews24

………………………..

சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here