மதம் மாற்றத்திற்கு எதிராக கொந்தளித்த 18 வயது தமிழச்சி. வழக்கு பதிந்த போலீசார்

0

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று காலம் காலமாக சொல்லிவருகின்றனர் , ஆனால் வருடத்திற்கு வருடம் இந்துக்களின் மக்கள்தொகை சதவீதம் என்பது குறைந்துகொன்டே வருகிறது

அதேசமயத்தில் கிருஸ்துவர்கள் மட்டும் முஸ்லிம்களின் மக்கள்தொகை சதவீதம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் மாற்றுமதத்தினர் இந்துக்களை தொடர்ந்து மதமாற்றி வருவதே ,

பல இந்துக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டும் , சிலர் ஆதாயத்திற்காகவும் மதம் மாறுகின்றனர் இப்படி மூளை சலவை செய்து மதம் மாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் என்று பல இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனாலும் இந்த மதமாற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது , கோவை சாமிசெட்டி பாளையம் பகுதியில் வசித்துவரும் செல்வராஜ் என்பவரின் மகள் பவித்ரா கோவை பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்

இதையும் படிக்க:  ரஜினி அணியில் இணைகிறாரா ரங்கராஜ் பாண்டே?

அதில் தான் கடந்த 8 ஆம் தேதி தனியாக வீட்டில் இருந்தபோது அங்குவந்த திவ்யா என்ற பெண் தன் கையில் பைபிள் ஒன்றை கொடுத்து தான் எகோவா சாட்சி என்றும், கடவுளை பற்றி சொல்ல வந்ததாகவும் தங்களுடைய கடவுள் தான் உண்மையானவர் என்று இந்துமதத்தில் நீங்கள் வழிபடுவது கடவுள்கள் அல்ல அனைத்தும் சாத்தான்கள் என்றும் கூறியுள்ளார் , மேலும் தங்கள் கடவுளை தான் இனி நீங்கள் வழிபட வேண்டும் என்றும் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

அதோடு இந்து கடவுள்களை தொடர்ந்து இழிவாக பேசியுள்ளார் இதனால் கோபமடைந்த பவித்ரா திவ்யா மீது பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் பபுகார் அளித்துள்ளார்

அந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் இந்தியாவிலேயே முதல் முறையாக மதமாற்றத்திற்கு எதிராக CSR வழக்கு பதிவு செய்துள்ளனர்

இதையும் படிக்க:  இந்துக்கள் விழாக்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன் மம்தா பானர்ஜிக்கு நீதிமன்றம் சவுக்கடி

திராவிடர்களால் பெரியார் மண் என்றழைக்கப்படும் தமிழகத்தின் கோவை பகுதியில் இந்தியாவின் முதல் CSR வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது இப்போது வைரலாகி வருகிறது.

இனி தமிழகத்தில் மதம் மாற்ற தடை சட்டத்தை கொண்டுவரவேண்டும் என்றும் அப்படி கொண்டுவந்தால் அப்பாவி ராமலிங்கம் போன்றோர் உயிர் போயிருக்காது என்றும் வழக்கு பதிந்த பவித்ராவின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.

©TNNEWS24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here