பெரியாரிஸ்டுகளுக்கு விழுந்த அடி இனி யாரவது வாயை திறக்க முடியுமா ?

கடந்த வாரம் தமிழ்நாடு அறநிலைய துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது அது தமிழ்நாட்டில் மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது.

இதனால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர், எனவே மழை வேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என்று அறநிலையத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.

அதன்படியே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள பல கோவில்களிலும் யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் திருப்பூர் அவிநாசி மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்த நிலையில்.

இதையும் படிக்க:  காலியாகும் தினகரனின் கூடாரம் முன்னாள் அமைச்சர் தாமோதரன் அதிமுக திரும்பினார்

நேற்று வேலூர் , தர்மபுரி கிருஷ்ணகிரி , திருவண்ணாமலை , சேலம் , ஈரோடு , காஞ்சிபுரம் , கொடைக்கானல் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

மழையுடன் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்தன , கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இந்த மழையால் பொதுமக்களும் , விவசாயிகளும் மகிழிச்சியடைந்துள்ளனர்.

கோவில்களில் யாகம் நடத்த அறநிலைய துறை உத்தரவிட்டபோது யாகம் நடத்தினால் மழை வருமா இது ஒரு முட்டாள்தனம் என்று கூறிவந்த கி வீரமணி உள்ளிட்ட பெரியாரிய இயக்கங்களை சார்ந்தவர்களை இப்போது சமூகவலைத்தளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து வாய்கிழிய பேசிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி ராஜா லட்சணம் தெரியுமா?
Loading...