முஸ்லிம்களுக்கு மட்டும் இலவசம் எனக்கூறி மொத்தமாக சுருட்டிய பிரபல நிறுவனம் ! தலையில் அடித்துக்கொள்ளும் பெண்கள்

சமூகவலைத்தளம்.,

சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு தகவல் அதிகமான நபர்களால் பகிரப்பட்டு வந்தது, பிரபல தனியார் நிறுவனம் ஒன்று முஸ்லிம்களுக்கு மட்டும் இலவசமாக வட்டியில்லாமல் நகைக்கடன் கொடுப்பதாக கூறி ஏழை, எளிய மக்களிடம் மொத்தமாக சுருட்டியுள்ளது. இதுகுறித்து முகமத் சீதக்காதி என்பவர் தனது facebook பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலை பார்க்கலாம்.


சென்னை டீ நகரில் #ரூபி_ஜூவல்லர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. நகைக்கு வட்டியில்லாமல் பணம் கொடுப்பதை தொழிலாக செய்து வந்தார்கள். அதாவது ஒரு பவுனுக்கு அதிகபட்ஜம் 10000 ரூபாய்.இது எதற்குமே வட்டி கிடையாது, நீங்கள் நகை தேவைப்படும் நேரம் வாங்கிய பணத்தை மட்டும் கொடுத்து நகையை திருப்பிக்கொள்ளலாம்.

இதன் நிறுவனர் ஒரு முஸ்லிம். இதன் வாடிக்கையாளர்களும் 99% இஸ்லாமியர்கள்தான்.வட்டி கிடையாது என்பதாலும், தேவையானபோது மீட்டுக்கொள்ளலாம் என்பதாலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் நகைகளை அதிகமாக வைத்துள்ளனர். கடந்த பத்து வருடமாக நம்பிக்கையோடு இந்த பரிவர்த்தனை நடந்து வந்து கொண்டிருந்தது.

இதையும் படிக்க:  மீண்டும் சவால் விட்டு சிக்கி கொண்டதால் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்படும் #எப்பசாவபிரசன்னா

இதற்க்கிடையில் ஒரு சில மாதங்களாக நகையை திருப்ப வேண்டும் என்று வந்தவர்களிடம் தொகையை பெற்றுக்கொண்டு, பேங்க் லாக்கரில் இருக்கு எடுத்து வரனும், ஒரு வாரம் பத்து நாள் கழிச்சு வாங்கன்னு சொல்லி அனுப்பியிருக்காங்க. 50%க்கு மேலான மக்கள் திருப்ப வேண்டிய காசை முழுவதும் கட்டியும், நகையை எடுத்து தருவதாக மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிலர் ப்ரச்சனை செய்து விஷயம் பெரிதாக தொடங்கியது.நேற்று முன்தினம் கோர்ட்ல இருந்து நிறுவனத்தை பூட்டு போட்டு சீல் வச்சு நிறுவனம் திவாலாயிருச்சு நகை கொடுத்தவங்க (நேற்று) வெள்ளி காலை 11 மணிக்கு கமிசனர் ஆபிஸ் வந்து கம்பளைண்ட் கொடுங்கன்னு நோட்டிஸ் ஒட்டிட்டு போயிட்டானுக.ஓனர் எஸ்கேப் ஆயிட்டான்.இந்த நோட்டிஸ் பார்த்துதான் பலருக்கு விஷயமே தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்க:  300 கார்களை எரித்து நாசமாக்கிய சிகரெட் துண்டு

நேற்று காலை கமிஷனர் ஆபிஸ்ல ஆண்களும் பெண்களுமா சுமார் 2000 பேருக்கு மேல கதறலோட திரண்டு வந்திருக்காங்க. ஒரு சகோதரிலாம் “நோன்பு முடிஞ்சதும் மகளுக்கு கல்யாணம் முடிக்கனும் இந்த 30 சவரனை நம்பித்தான் இருந்தேன்னு” பாவி இப்டி பண்ணிட்டானேன்னு பெருங்குரலெடுத்து அழுதாங்கன்னு கேக்கும் போது மனசு பாரமாயிடுச்சு.

எல்லா ஊர்ல இருந்தும் கிட்டத்தட்ட 20000த்துக்கும் அதிகமானோர் தங்கள் நகையை வச்சிருக்காங்க.., இதுல வாங்கிய பணத்தை கட்டியும் நகை கிடைக்காமல் அநேகம் பேர். கிட்டத்தட்ட 500 கோடி வரை பணம் சுருட்டப்பட்ருக்குன்னு தகவல் வருது. முக்கால்வாசி நடுத்தர குடும்ப மக்கள் பாவம் என்ன செய்யப்போறாங்கன்னு தெரியல. படைத்த ரப்தான் உதவி புரியனும்.

இதையும் படிக்க:  சாதி அரசியல் நாமக்கல் தொகுதியில் வெல்லப்போவது யார் ?

காவல்துறை துரிதமா நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவங்க நகை கிடைக்க ஏற்ப்பாடு செய்யனும்னு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.

சகோதரன்_சீதக்காதி.

இலவசம் என்பது அரசியல்வாதிகளால் மக்களுக்கு கொடுக்கப்பட்டு பின்பு தனது ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு எது போன்ற பயன்கள் கிடைத்தது என்று அனைவரும் அறிவர், அப்படி இருக்கையில் வட்டியில்லாமல் பணத்தை ஒரு நிறுவனம் கொடுக்கிறது, என்றால் அனைவரும் சிந்தித்திருக்கவேண்டும்.

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுத்தரவிரண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...