ராணுவம் மோடி குறித்த விமர்சனம் நடிகர் சித்தார்த் மீது சாணி அடிப்பு பாய்ஸ் பட பாணியில் தப்பி ஓட்டம் !

ராணுவம் மோடி குறித்த விமர்சனம் நடிகர் சித்தார்த் மீது சாணி அடிப்பு பாய்ஸ் பட பாணியில் தப்பி ஓட்டம் !

மங்களூர்.,

கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள தனியார் நகை கடை திறப்பு விழாவில் கடந்துகொள்வதற்காக நடிகர் சித்தார்த் இன்று மங்களூர் சென்றிருந்தார்.

நடிகர் சித்தார்த் கர்நாடக மாநிலதிற்குள் நுழையக்கூடாது என்று கன்னட சமிதி அமைப்பினர் போராட்டம் அறிவித்தனர்,மேலும் இந்துமதம் குறித்து அவதூறான விமர்சனம் சில நாட்களுக்கு முன்பு ராணுவத்தினர் மற்றும் பிரதமர் குறித்து சர்ச்சையான முறையில் விமர்ச்சித்திருந்தார்.

இது கர்நாடகாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது, இந்த சூழலில் நகை கடை திறப்பு விழாவிற்கு தனது காரில் வருகை தந்த நடிகர் சித்தார்த் மீது கன்னட சமிதி அமைப்பினர் மங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை வழிமறித்து திரும்பி செல்ல அறிவுறுத்தினர்.

இதையும் படிக்க:  மோடி வந்த பிறகு மதமாற்றம் பாதியாக குறைந்துவிட்டது அப்போ மோடியை எதிர்க்க இதான் காரணமா?

ஆனால் சித்தார்த் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து இரு தரப்பினருக்கு இடையே கைகலப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டது, ஆனால் போலீசார் தலையிட்டு விலக்கிவிட, சித்தார்த் உடன் வந்த பவுன்சர்கள் போராட்டக்காரர்கள் மீது கைவைத்ததை தொடர்ந்து நடிகர் சித்தார்த் மட்டும் அவருடன் வந்தவர்கள் மீது சாணி அடிக்கப்பட்டது.

இதனால் வாகனத்தை விடுத்து பாய்ஸ் பட பாணியில் ஓடிய சித்தார்த் போலீஸ் வாகனத்தில் ஏறி தப்பித்தார், ஆனால் அவருடன் வந்தவர்கள் கூட்டத்தில் சிக்கி தர்ம அடிவாங்கினர்.

நடிகர் சித்தார்த் மீது சாணி தெளிக்கப்பட்டதற்கு கன்னட நடிகர் சங்கம் மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும் பெந்தோ கிறிஸ்துவ சபை சார்பில் டிஜிபி அலுவலகத்தில் சிறுபான்மையிரான சித்தார்த் தாக்கப்பட்டது குறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  புல்வாமா தாக்குதலுக்கு அனைத்து நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவு கரம் நீட்ட காரணம் இதுதான்!

©TNNEWS24