பிரமாண்ட கருத்துக்கணிப்புகளை வெளியிட்டார் அர்னாப் தமிழகத்தில் அதிமுக, திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளை கைப்பற்றும்?

பிரமாண்ட கருத்துக்கணிப்புகளை வெளியிட்டார் அர்னாப் தமிழகத்தில் அதிமுக, திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளை கைப்பற்றும்?

டெல்லி.,

நாடுமுழுவதும் நடத்தப்பட்ட பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது ‘ரிபப்ளிக் பாரத் ‘ ஹிந்தி தொலைக்காட்சி.

அதன் முடிவுகள் பல ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. இதற்கு முன்னர் இதே நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகள் தமிழகத்தில் திமுக கூட்டணி அதிகமான இடங்களை கைப்பற்றும் என்று சொல்லி இருந்தது குறிப்பாக 34 – இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றும் என்று இந்த நிறுவனம் சொல்லி இருந்தது.

தற்போது தமிழகத்தில் 20 ஆயிரம் நபர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள், பாஜக அதிமுக, மற்றும் பாமக, தேமுதிக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிக்க:  தஞ்சாவூர் தொகுதியில் வெற்றி யாருக்கு ? தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவு வெளியானது.

திமுக கூட்டணி 18 முதல் 19 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், அதிமுக கூட்டணி 20- 21 தொகுதிகளை கைப்பற்றும் என்று சொல்லியுள்ளது. முன்பு இதே நிறுவனம் 34 இடங்களை திமுக கைப்பற்றும் என்று சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் ஒட்டு மொத்த இந்தியாவில் பாஜக தனித்து 248 முதல் 260 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமாக -304 முதல் 316 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி தனித்து 73 முதல் 80 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், மொத்தமாக 117 இடங்கள் முதல் 126 இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க:  ஸ்டாலினை வச்சு செய்யும் நெட்டிசன்கள் வயிறு குலுங்க சிரிக்க இதை பாருங்கள்

மேலும் கடைசி நேர தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் இன்னும் மாற்றத்தை கொண்டுவரும் என்றும் இந்து மத வாக்குகள் இந்த முறை அதிக அளவில் வெற்றி தோல்வியை நிர்மாணிக்கும் சக்தியாக தமிழகத்தில் இருக்கும் என்றும் அரசியல் நோக்கற்கள் கருதுகிறார்கள்.

©TNNEWS24

Loading...