முதலில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெறுமா இல்லை 3 எம் எல். ஏ கள் தகுதி நீக்கமா? வழக்கறிஞர் தமிழ்மணி தகவல்

முதலில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெறுமா இல்லை 3 எம் எல். ஏ கள் தகுதி நீக்கமா? வழக்கறிஞர் தமிழ்மணி தகவல்

சென்னை.,

தமிழக அரசியல்களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து கொண்டுள்ளது அனைவரும் மே 23 தேர்தல் முடிவுகள் குறித்து எதிர்பார்த்து கொண்டிருக்க, தமிழக அரசியலில் அடுத்த திருப்பமாக சபாநாயகர் தனபால் தினகரன் பக்கம் சென்ற 3 எம். எல் ஏ கள் கட்சித்தாவல் தடை சட்டத்தின் மூலம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக சின்னத்தில் நின்று வெற்றிபெற்றுள்ள, ரெத்தின சபாபதி, கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூன்று எம் எல் ஏ களும் தினகரன் நடத்திவந்த அமமுக அமைப்பில் இணைந்து இந்த தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக வாக்குகளை சேகரித்தனர். சட்டத்தின்படி ஒருவர் எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்குபெற்றார் என்ற காரணத்தை முன்வைத்தே பதவி நீக்கம் செய்யப்பட்ட வரலாறுகளும் உண்டு எனவே அந்த வகையில் அதிமுகவின் நடவடிக்கை சட்டத்தின்படி சரி.

இதையும் படிக்க:  திமுகவை அடித்து துவைக்க வா என மோடியையே வரவேற்கும் நெட்டிசன்கள் ட்விட்டர் டட்ரெண்டிங்கில் #TNWELCOMESMODI #DMKFAILS

ஆனால் எதிர்கட்சிகளோ சபாநாயகர் காலம்தாழ்த்தி சரியாக ஒருவருடம் கழித்து இப்போது நடவடிக்கை எடுப்பது உள்நோக்கம் இருப்பதாகவும், தெரிவித்து அவர் மீதே நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற சட்டபேரவை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இந்த இக்கட்டான நிலையில் சபாநாயகர் மீதே நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்திருப்பதால் முதலில் சபாநாயகர் 3 எம் எல் ஏ கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாத என்ற கேள்விக்கு மூத்த வழக்கறிஞர் தமிழ் மணி தனது பதிலை தெரிவித்துள்ளார்.

பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து தமிழ் மணி அவர்கள் முன்பே சரியாக சட்டத்தின் படி சொல்லியிருக்கிறார் அந்தவகையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுப்பதற்கு முன்பே எம். எல். ஏ களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுவிட்டது அந்த வகையில் அவர் நடவடிக்கையினை தாராளமாக எடுக்கலாம், மேலும் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற ஆளுநர் சட்டசபையை ஆளும்கட்சி கொடுத்த நாளில் கூட்ட வேண்டும்.

இதையும் படிக்க:  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த வைகோ வெடிவெடித்து கொண்டாடிய பாஜகவினர்.. எந்த ஊரில்

எப்படி பார்த்தாலும் ஜூன் மாதத்தில்தான் ஆளுநர் சட்டசபையை கூட்ட வாய்ப்புண்டு எனவே சபாநாயகர் எம் எல் ஏ கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் தமிழ் மணி கருத்து தெரிவித்துள்ளார்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...