மீண்டும் அந்த வார்த்தையை சொன்னால் அந்தரங்கத்தை வெளியிடுவேன் அதிரடி காட்டிய அய்யாக்கண்ணு ! பம்மிய சுபவீ

மீண்டும் அந்த வார்த்தையை சொன்னால் அந்தரங்கத்தை வெளியிடுவேன் அதிரடி காட்டிய அய்யாக்கண்ணு ! பம்மிய சுபவீ

சென்னை.,

தமிழக விவசாயிகளுடன் டெல்லியில் சென்று போராடிய அய்யாக்கண்ணு வித்தியாசமான போராட்டங்களின் மூலம் அதிரடி காட்டியவர்.

இதற்கிடையில் திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் அய்யாக்கண்ணு கலந்துகொண்டு பேசியபோது, திமுகவினர் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர், மேலும் திமுக சார்பில் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் தேர்தல் விளம்பரங்களில் எலிக்கறி தின்ற விவசாயிகள் என அவருடைய போராட்டத்தை முன்னெடுத்தே வாக்குகளை சேகரிக்கின்றனர்.

ஆனால் தற்போது திமுகவினர் உட்பட எதிர்க்கட்சிகள் அனைவரும் அய்யாக்கண்ணுவை எதிர்க்க தொடங்கிவிட்டனர். காரணம் அவர் பாஜக தலைவர் அமிட்ஷாவை சந்தித்த பிறகு மோடியை எதிர்த்து வாரணாசியில் 111 விவசாயிகள் போட்டியிடும் முடிவை மாற்றிக்கொண்டார்.

இதையும் படிக்க:  அஜித்தை கம்பி என்ன வைக்காமல் விடமாட்டோம் விடுதலை சிறுத்தைகள் எச்சரிக்கை !

நதி நீர் இணைப்பு திட்டத்தை பாஜக அரசு நடைமுறைப்படுத்தும் என்று உறுதியளித்துள்ளதால் முடிவை மாற்றிக்கொள்வதாக அறிவித்தார். அவ்வளவுதான் யார் அவரை தூக்கி வைத்து கொண்டாடினார்களோ இப்போது அவர்களே அய்யாக்கண்ணுவை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

குறிப்பாக சுப.வீ அய்யாக்கண்ணுவை கடுமையாக சாடி பேசினார் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்

அய்யாகண்ணு அவர்களே, தில்லியில் அம்மணமாக ஓடியது அமித்ஷா வைப் பார்க்கத்தானா? அல்லது அம்மணமாக ஓடினால்தான் அமித்ஷா சந்திப்பாரா? ” தங்கமணி ரகசியம் ” நமக்குப் புரியவே இல்லை. என்று அவரை உள் அர்த்தத்துடன் பேசியிருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் திருச்சியில் பேசிய அய்யாக்கண்ணு நான் விவசாயிகளின் பிரச்சனைகளை முன்வைத்துதான் ஆளும்கட்சியின் தலைவரை சந்தித்தேன் அவரை மட்டுமல்ல அனைத்து முக்கிய கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்திருக்கிறேன், வானம் பார்த்த பூமியாக உள்ள தமிழகத்தில் நதிகளை இணைத்தால் நிச்சயம் தமிழகத்திற்கு பலன் அளிக்கும் அதனை முன்வைத்துதான், எனது கருத்தை வெளிப்படுத்தினேன்.

இதையும் படிக்க:  என்றும் கட்சி நலனே முக்கியம் வாழ்த்து சொன்ன வானதி சிண்டு முடிந்த போலிகளுக்கு செருப்படி !

ஆனால் காங்கிரஸ் அறிக்கையில் நதிநீர் இணைப்புப்பற்றிய எந்த திட்டமும் இல்லை இருந்திருந்தால் அவர்களுக்கும் நன்றி சொல்லியிருப்பேன் ஆனால் தற்போது சுபவீ போன்றோர் என்னை அம்மணமாக ஓடுகிறேன் என்று கேலி கிண்டல் செய்கின்றனர், இது என்னையா இல்லை என்னை போன்ற விவசாயிகளின் நிலையையா என தெரியவில்லை.

மீண்டும் ஒரு சிலர் தான்தோண்டி தனமாக பேசினால் அவர்கள் எங்கெல்லாம் அம்மணமாக ஓடினார்கள் என்ற தகவல்களை வெளியிடுவேன் என்று வெளுத்துக்கட்டி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து இனி சுபவீ வாயை திறக்கமாட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள் அப்படி வாயை திறந்தால் பல அந்தரங்கள் வெளியாகுமோ என பதற்றத்தில் இருக்கிறாராம் சுபவீ.

©TNNEWS24

Loading...

இதையும் படிக்க:  ஸ்கெட்ச் போட்டு சீனா பாக்கிஸ்தான் இரண்டையும் ஒரே நேரத்தில் வென்ற மோடி!