கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த மம்தா ! தடையை மீறி உள்ளே செல்லும் அமிட்ஷா வெடித்தது கலவரம் !

கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த மம்தா ! தடையை மீறி உள்ளே செல்லும் அமிட்ஷா வெடித்தது கலவரம் !

மேற்கு வங்கம்.,

மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை தொடங்கியுள்ளது.

தேர்தல் அறிவிக்கும் நாட்களுக்கு முன்பிருந்தே, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக தலைவர்களை மேற்கு வங்கத்திற்குள் அனுமதிக்காமல் தடை விதித்து வந்தார், அதற்கு காரணமாக மம்தா பானர்ஜி சொன்னது அமைதியான மாநிலத்தில் பாஜகவினர் வந்தால் கலவரம் உருவாகும் என்று கூறி சமாளித்தார்.

ஆனால் மேற்கு வங்கம் வெகுவிரைவாக பாஜகவிற்கு சாதகமான சூழலாக மாறிவருவதும், எங்கே நமது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற காரணத்தை முன்வைத்துதான் மம்தா பாஜகவினரை அனுமதிக்கவில்லை என்பதை விவரம் அறிந்த அனைவரும் அறிவர்.

இதையும் படிக்க:  என்ன நடக்கிறது மேற்கு வங்கத்தில் முகத்தை மூடிக்கொண்டு வாக்களிக்கும் நிலைக்கு சென்ற பெண்கள் !

தற்போது மம்தா பானர்ஜி ஒரு கட்ட தேர்தல்கள் மீதம் இருக்கும் சூழலில் பாஜக தலைவர் அமிட்ஷா இன்று மேற்குவங்கம் மாநிலம் ஜாம்செட்பூரில் வீதி பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு முன்பே அனுமதி பெற்று இருந்தார். தற்போது கடைசி நேரத்தில் பாஜக தலைவர் அமிட்ஷா ஹெலிஹாப்டரை தரை இறக்க மம்தா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இது பாஜக தொண்டர்களை கடுமையான கொந்தளிப்பிற்கு உள்ளாகியுள்ளது, மேற்கு வங்கம் மாநிலத்தின் பல பகுதிகளில் மம்தாவின் உருவ பொம்மை மற்றும் பாணர்களை அடித்து உடைத்து வருகின்றனர். இந்த சூழலில் எந்த தடையையும் தாண்டி இன்று மேற்கு வங்கம் சென்றே தீருவேன் என்று அமிட்ஷா தீர்மானமாக சொல்லிவிட்டார்.

இதையும் படிக்க:  பாமக Vs விசிக ,விழுப்புரம் தொகுதியில் வெற்றி யாருக்கு ? தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

தற்போது மம்தா மற்றும் அமிட்ஷா இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேற்குவங்கத்தில் பாஜக இந்த முறை 15 தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...