அத்தை பேக்கரி டீலிங் உதயநிதியை வெளுத்து கட்டிய அன்புமணி இனி உதயநிதி வாயை திறக்கமுடியுமா?

அத்தை பேக்கரி டீலிங் உதயநிதியை வெளுத்து கட்டிய அன்புமணி இனி உதயநிதி வாயை திறக்கமுடியுமா?

மேடவாக்கம்.,

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் 5- ம் கலைஞர் உதயநிதி ஆகியோரை இன்று சென்னை மேடவாக்கத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சரமாரியாக வெளுத்து வாங்கியிருக்கிறார் அன்புமணி.

திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பாமகவை செல்லும் இடங்களில் எல்லாம் விமர்ச்சனம் செய்துவருகிறார் அரசியல் ரீதியாக அல்லாமல், தனிமனித தாக்குதலில் திமுக தலைவர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அன்புமணி திமுகவிற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

நான் நேருக்கு நேர் திமுகவுடன் விவாதம் நடத்த தயார் ஸ்டாலினும், உதயநிதியும் வரதயாரா?

இதையும் படிக்க:  இஸ்லாம் மதத்திடம் இந்து மதம் கையேந்த வேண்டும் திருமாவளவன் சர்ச்சை பேச்சு இதற்கு பெயர்தான் மத சார்பின்மையா? வீடியோ இணைப்பு

வன்னியர் சமுதாய சொத்துக்களை எனது தாயார் பெயரில் அபகரித்ததாக குற்றம் சாட்டிய ஸ்டாலின் அதனை நிரூபிக்க தயாரா போகிற போக்கில் ஏதாவது சொல்லிவிட்டு போவதே ஸ்டாலினின் வழக்கம், ஸ்டாலின் நிரூபித்தால் நான் நீங்கள் சொல்வதை கேட்கிறேன் அப்படி இல்லை என்றால் திமுக தலைவர் பதவியில் இருந்து ஸ்டாலின் விலகவேண்டும் என்று எச்சரித்தார்.

மேலும் உதயநிதி போன்றோர் வாயை அடக்கவேண்டும் அண்ணா போன்றவர்கள் ஆரம்பித்த இயக்கத்தை ஸ்டாலின், உதயநிதி போன்ற தெரு பேச்சாளர்களிடம் சிக்கியுள்ளதாக வெளுத்து வாங்கினார்.

திமுகவில் ஸ்டாலின் மகன், மச்சான், மாமனார், தங்கச்சி, அத்தை, மருமகன், சகலை என அனைவரும் இந்த தேர்தலில் நிற்கின்றனர் இது என்ன இவர்களின் சொத்தா என்று கேள்வி எழுப்பிய அன்புமணி.

இதையும் படிக்க:  பாஜகவினர் தாக்க பட்டதற்கு பழி தீர்க்க " பாக்கதானே போற இனி இந்த மோடியோட ஆட்டத்தை " ட்விட் போட்டுவிட்டு இன்று மேற்கு வங்கம் செல்லும் மோடி.

இறுதியில் சொன்ன வார்த்தை உதயநிதிக்கு கொடுத்த சவுக்கடியாகத்தான் பார்க்கப்படுகிறது, திடீரென ஸ்டாலினின் மகன் என்பதற்காக அரசியலில் வந்துவிட்டு வாய்க்கு வந்த வகையில் பேசியதாக பலரும் சொல்லிய நிலையில் இனியும் உதயநிதி வாயை அடக்கவில்லை என்றால் பேக்கரி டீலிங் போன்றவற்றை பற்றி விவாதிக்கவேண்டியிருக்கும் என்று ஒரே வார்த்தையில் உதயநிதிக்கு வாய் பூட்டு போட்டுவிட்டார்.

இனியும் உதயநிதி எதாவது பேசினால் அது அவரது குடும்பத்தினரின் மதிப்பை மேலும் பொதுவெளியில் இழக்கும் சூழல் ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

எல்லாம் சரி அது என்ன பேக்கரி டீலிங் வடிவேல் காமெடி கதையை சொல்றாரோ?

©TNNEWS24

Loading...