தேடிவந்த வாய்ப்பை மறுத்த ரஹ்மான் புகழும் ரசிகர்கள்

மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படமான ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ .ஆர்.ரகுமான் ..இந்தி ,தமிழ் ,ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் இசை அமைத்து மக்களால் இசை புயல் என்றும் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுபவர் ..

மிக உயரிய ஆஸ்கார் விருது முதல் கோல்டன் குளோபல் விருது ,தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றவர் ஆஸ்கார் மேடையில்
எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழில் பேசி தமிழுக்கு பெருமை சேர்த்தவர் …

இத்தகைய உள்ளம் கொண்ட மனிதரை தேடிவந்தது கனடா குடிஉரிமை ..இதேபோல் இதற்குமுன்னர் நடிகர் அக்சை குமாருக்கு கனடா நாடு குடி உரிமை வழங்கியது அவர் அதை ஏற்றுக்கொண்டு கனடா குடிஉரிமையை பெற்றுக்கொண்டு கனடா குடிமகனானார்.

இதையும் படிக்க:  2.0 படத்திற்கு ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆனால் எஆர் ரகுமான் கனடா நாட்டின் மேயருக்கு டுவிட்டரில் குடியுரிமை கொடுக்க முன்வந்ததற்கு நன்றி கூறியதுடன் , என் தாய்நாட்டை துறந்து உங்கள் நாட்டின் குடியுரிமையை பெரும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை என்று கூறி அதை மறுத்துள்ளார் .

அதற்கு காரணம் கேட்ட மேயருக்கு இந்திய என் நாடு .நான் தமிழ்நாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் ..நான் என் ரசிகர்களையும் நண்பர்களையும் விட்டு வரமாட்டேன் என்று கூறியுள்ளார்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...