சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்தியாவின் ASAT செயற்கைகோளில் அப்படி என்ன இருக்கிறது.

நேற்று உலகையே திரும்பி பார்க்க வைத்தது இந்தியா என்று சொன்னால் அது மிகையல்ல.

இந்தியாவை கண்காணிக்க வரும் உளவு செயற்கைக்கோள்கள் மற்றும் இந்திய செயற்கை கோள்களை அழிக்க வரும் எதிரி நாட்டு ஏவுகணைகள் மற்றும் செயற்கைகோளை வானிலேயே பஸ்பமாக்கும் செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது இந்தியா.

மிஷன் சக்தி என்ற பெயர் கொண்ட இந்த ஏவுகணை சோதனையை இந்தியா அரசும் இஸ்ரோ விஞ்ஞானிகளும் ரகசியமாக வெற்றி கரமாக முடித்தனர்.

ஓடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.புவியின் தாழ்வான சுற்றுவட்ட பாதையில் இந்தியாவை கண்காணிக்க வரும் செயற்கைக்கோளை.தாக்கி அழிக்கும் வகையில் இந்த சோதனை மேற்க்கொள்ளப்பட்டது.

இவ்வளவு நாள் வானில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை மட்டுமே அழிக்கும் திறனை பெற்று இருந்த இந்தியா இனி விண்ணிலும் எதிரிகளை தவிடு பொடியாக்கும் திறனை பெற்றுள்ளது.

அமெரிக்கா,ரசியா மற்றும் சீனாவுக்கு அடுத்த படியாக இந்த வெற்றிச் சரித்திரத்தை.இந்தியா படைத்துள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் interceptor ஏவுகணையை DRDO பயன்படுத்தி உள்ளது.

Fly by Tests மற்றும் ஜாம்மிங் (jamming) மூலம் எதிரி செயற்கைக்கோளை அழிக்க முடியும் என்ற போதிலும் இந்தியா ஏன் இந்த Kinetic kill என்றழைக்கப்படும் இந்த மாதிரியான சோதனையை செய்தது என்றால் வளர்ந்து வரும் வானியல் தொழிநுட்பங்களுக்கு.ஏற்ப.நாமும் நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.இல்லையேல் எதிரி நம்மை 1962 இல் அடித்த மாதிரி ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை தான் பார்க்க முடியும்.

இதையும் படிக்க:  செம்மொழி மாநாட்டிற்கு ஆனா கணக்கை மறுதணிக்கை செய்ய உத்தரவிட்ட எடப்பாடி கப்சுப் ஆனா ஸ்டாலின்

இந்த சோதனை புவியின் குறைந்த சுற்றுவட்ட பாதையில் மேற்கொண்ட காரணத்தால் விண்வெளி குப்பைகளை இது உருவாக்காது.

விண்வெளி துறையில் மாட்டு வண்டி மற்றும் சைக்கிளில் வைத்து செயற்கைக்கோளை கொண்டு சென்ற இந்தியா இன்று மங்கள்யான் மற்றும் சந்திராயன் என்று பல முக்கிய வெற்றிகளை குவித்து வருகிறது..இதனால் தற்போது ககன்யான் திட்டத்திற்கும் இந்திய அரசு அனுமதி அளித்து இந்தியர்கள் விரைவில் விண்வெளிக்கு செல்ல உள்ளனர்.

அதுமட்டுமின்றி 102 செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டது போன்ற பல்வேறு வியக்கத்தகும் சாதனைகளை மேற்கொண்டு உலக நாடுகளின் செயற்கை கோள்களை வணிக ரீதியில் விண்ணில் ஏவி வருகிறது இந்தியா.அதனால் விண்வெளியில் நமக்கு.பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது ஆகவே தான் இந்த சோதனையை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு அனுமதி அளித்ததால் இன்று வெற்றியை பெற்றுள்ளது.2014 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு திட்ட பணிகளுக்கு அனுமதி கிடைத்து பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

2007 இல் சீனா SC -19 என்ற ஏவுகணை மூலம் Feng Yun IC என்ற வானிலை ஆராய்ச்சி செயற்கைக்கோளை அழித்து அந்த சோதனையில் வெற்றி பெற்றது.ஆனால் அந்த சோதனையால் 3000 பெரிய குப்பைகளையும் 32000 சிறிய குப்பைகளையும் சீனா உருவாக்கியது.இந்த விண்வெளி குப்பைகள் விண்ணில் வலம் வந்த ஆயிரக்கணக்கான செயற்கை கோள்கள் மற்றும் உலகளாவிய விண்வெளி நிலையத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

இதையும் படிக்க:  பாண்டே கருத்து கணிப்பு உங்கள் தொகுதியில் வெல்வது திமுகவா அதிமுகவா?

BMD எனப்படும் பாலியிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்க்கும் வான் பாதுகாப்பு அமைப்பை கொண்ட நாடுகளால் மட்டுமே ASAT எனப்படும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்க முடியும்.அதனால் தான் இந்தியாவால் இதை வெற்றிகரமாக செய்ய முடிந்தது.

எதிரி செயற்கை கோள்களை தாக்கி அழிக்க இந்தியா வெடி மருந்துகளை கொண்ட warheads யை பயன்படுத்தவில்லை.காரணம் நமது ஏவுகணையின் வேகம் மிக வேகமாக இருப்பதால் இது எதிரி செயற்கைக்கோள் மேல் மோதினால் மட்டுமே போது எதிரி செயற்கைக்கோள் வெடித்துச் சிதறி விடும் வகையில் Mach Number 8 என்ற வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.பிரித்வி ஏவுகணையை தாங்கி செல்லும் அமைப்பு மூலம் இந்த சோதனை வெற்றிகரமாக.நடத்தப்பட்டுள்ளது.
இந்தியா அமைதியை நிலைநாட்ட தான் இந்த சோதனையை நடத்தி உள்ளது.இதன் மூலம் நம் செயற்கைக்கோளை.எதிரிகள் தொட்டு பார்க்க யோசிப்பார்கள்.

இந்த சோதனை எந்த ஒரு நாட்டிற்கும் எதிரானது அல்ல என்று இந்தியா தெரிவித்துள்ளது..ஆனாலும் இந்தியா இந்த சோதனை மூலம் நம் பரம எதிரியான சீனாவை கலக்கம் அடையச் செய்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.

இதையும் படிக்க:  (#வீடியோ உள்ளே )ராகுல் கல்லூரி நிகழ்ச்சியில் விண்ணை பிளந்த மோடி மோடி கோசம் வேறுவழியின்றி சரண்டரான ராகுல்.

இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நம் பெருமையை..ஆனால் வழக்கம்.போல இம்ரான் பிள்ளைகள் மற்றும் நகர்ப்புற நக்சல்கள் இந்த வெற்றிச் சரித்திரத்தை கிண்டல் அடித்து வருவது வேதனையாக உள்ளது.

போர் வராமல் தடுக்க தான் இந்தியா இது போன்ற நவீன சோதனைகளை செய்து நம்மை தயார்படுத்தி வருகிறது.நம்மிடம் வலிமை இல்லை என்றால் இந்தியா என்றோ சிதறுண்டு இருக்கும்.நம்மிடம் இருக்கும் இந்தியர் என்ற உணர்வும் ஒற்றுமையும் தான் நம்மை உலக அரங்கில் கம்பீரமாக காட்டுகிறது.

போர் என்று வந்தால் இந்தியா சமாதானம் சமாதனம் வேண்டும் என்று ஓடிய காலங்கள் போயி இனி போர் என்றால் இந்தியாவிடம் ஓடி வந்து சண்டை வேண்டாம் என்று உலக நாடுகள் கெஞ்சுகின்றன என்றால் அதற்கு காரணம் நம் இராணுவ வீரர்களின் துணிவும் நம் நாட்டில் உள்ள பயங்கரமான போர் ஆயுதங்கள் தான் காரணம்.அதற்கு உதாரணம் இந்தியா மேற்கொண்ட இரண்டு அதிகாரப்பூர்வமான சர்ஜிக்கல் தாக்குதல்கள் தான்.

இந்த ASAT சோதனையை செய்ய 2013 இல் காங்கிரஸ் அரசிடம் DRDO அனுமதி கேட்டது.ஆனால் அப்போதைய அரசு அனுமதி அளிக்கவில்லை என்று DRDO வின் முன்னாள் விஞ்ஞானி Dr VK சரஸ்வாட் தெரிவித்துள்ளார்.

Credit – இந்திய தேசிய இராணுவம்

Loading...