விஷாலின் அயோக்யா திரைப்படம் இந்துக்களுக்கு எதிராக செய்த அயோக்கியத்தனமா? இதை எத்தனை பேர் கவனித்தீர்கள்

நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து உருவான படம் அயோக்யா இந்த திரைப்படம் தெலுங்கில் வெளிவந்த டெம்பர் என்னும் படத்தின் ரீமேக்,

டெம்பர் திரைப்படம் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றது அந்த படத்தை இப்பொது விஷாலை வைத்து அப்படியே ரீமேக் செய்துள்ளனர்.

ஒரு காட்சிகூட மாறாமல் தெலுங்கில் உள்ளது போலவே உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் வந்த டெம்பர் படத்தில் கதாநாயகனுக்கு உதவியாக ஒரு போலீஸ் வருவார் அவர் பெயர் நாராயண மூர்த்தி எப்போதுமே நெற்றியில் பொட்டு கழுத்தில் ருத்ராச்ச கயிறு அணிந்திருப்பார் தீவிரமான இந்து மத நம்பிக்கை கொண்ட ஒருவராக காட்டப்பட்டிருப்பார் அந்த மூர்த்தி

இதையும் படிக்க:  ஊட்டியில் சொகுசு பங்களா வாங்கிய ஜூலி…..

கதைப்படி அவர் மிகவும் நேர்மையான அதிகாரி அந்த படத்திலேயே நல்ல நேர்மையான கதாபாத்திரம் எது என்று கேட்டால் அனைவரும் நாராயண மூர்த்தி கதாபாத்திரத்தை கூறுவர்

ஆனால் தமிழில் வெளியான அயோக்யா படத்தில் அந்த நேர்மையான நாராயண மூர்த்தி என்ற கதாபாத்திரத்தின் பெயரை அப்துல் காதர் என்று மாற்றியுள்ளனர்

டெம்பர் படத்திலுள்ள அனைத்தையும் அப்படியே கொண்டுவந்த அயோக்யா படக்குழு இந்த மூர்த்தி இந்து கதாபாத்திரத்தை மட்டும் அப்துல் காதர் என்று மாற்றியதன் உள்நோக்கம் என்ன ?

இந்துக்கள் யாரும் படத்தில்கூட நேர்மையானவர்களாக , நல்லவர்களாக காட்டப்படக்கூடாதா? என்ற கேள்வியை இந்து அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் எழுப்பி வருகின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  ராதாரவி ஒரு போலி மலேசியா போனா இனி காலி !
Loading...