பானுகோம்ஸ் கேட்ட இரண்டு கேள்விகள் டிமானிடேசன் பெயிலியர்னு இனி சொல்லுவீங்க?

டிமானிடேசன் பெயிலியர்னு இனி சொல்லுவீங்க

துரைமுருகன் மற்றும் அவரது உதவியாளர் வீட்டில் நடந்த வருமான வரித்துறையினர் சோதனையில், கைப்பற்றப்பட்ட பணம் குறித்து எதிர்க்கட்சிகள் சில வாய் திறக்கவில்லை பலர் இது வேண்டுமென்றே எதிர்க்கட்சிகளின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்றும் சொல்லிவரும் வேலையில்,

இது போன்ற சோதனைகள் எவ்வாறு சாத்தியமாகின்றன என்பது குறித்து அரசியல் விமர்ச்சகர் பானுகோம்ஸ் தனது முகநூலில் பதிவிட்டுள்ள கருத்துக்களை பார்க்கலாம்.

பானுகோம்ஸ் பதிவுகள் பின்வருமாறு :-

எதிர் கட்சிகளை மிரட்ட மத்திய அரசு..வருமான வரித்துறையை பயன்படுத்துகிறது- எதிர் கூட்டணி

demonetization, வங்கி கணக்குகள் ஆதாருடன் இணைப்பு, இன்ன பிற தங்கம், ரியல் எஸ்டேட் சீர்திருத்தம், போலி கம்பெனிகளை எளிதாக கண்டறிவது குறித்த சட்ட சீர்திருத்தங்கள், மானியங்களை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் சேர்ப்பது..போன்ற சீர்திருத்தங்களுக்கு பிறகு..பணத்தின் நடமாட்டம், பண பரிமாற்றம் குறித்த பாதையை முன்னரை விட எளிதாக கண்டறிய முடிகிறது.

இதையும் படிக்க:  கார் செட்டில் அமர்ந்து வேலை பார்க்கும் IG பொன்மாணிக்கவேல்... சகாயம் குறித்து கவலைபட்ட யாரும் கண்டுகொள்ளவில்லையே ஏன்?

மத்திய அரசு தான் செய்கிறது என்கிற வாதத்தின் படியே பார்த்தாலும்..

எதிர் கட்சி, கூட்டணி கட்சி, சொந்த கட்சி என்று எந்த பாகுபாடுமின்றி.. மத்திய அரசு சோதனை நடத்துகிறது என்பதே இந்த ஆட்சியில் நடந்த சோதனைகள் தெரியப்படுத்தும் உண்மை.

  1. சோதனைகளில் ..கோடி கோடியாக பணம் மாட்டுகிறதே …ஏன் ? முன்னரை விட இப்போது..அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிவது எளிது.
  2. அரசியல் மிரட்டல் எனில்..மிரட்டும் அளவிற்கு கோடிகளில் பணத்தை பதுக்கி வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன ???

ஆக… மத்திய அரசு தான் பொறுப்பு எனில் ..அது மோடிக்கான மிகப் பெரிய பாராட்டு என்பதே பொருள் ! 🙂

. அதாவது மோடி அரசு செய்த சீர்திருத்த காரணங்கள்தான், தற்போது இதுபோன்ற கருப்பு பணங்களை பதுக்குபவர்களை எளிதாக கண்டறிய உதவுவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் ரத்தத்தை ஏற்றியவர்கள் ஒரு மாதத்திற்கு முன்னாள் என்ன போராட்டத்தில் ஈடுபட்டார்கள் தெரியுமா?

©TNNEWS24

Loading...