மல்லையா நீரவ் மோடி குறித்து இனி வாயை திறக்கமாட்டார்கள் மதசார்பற்ற கூட்டணியை மூக்குடைத்த பானுகோம்ஸ்.

மல்லையா நீரவ் மோடி குறித்து இனி வாயை திறக்கமாட்டார்கள் மதசார்பற்ற கூட்டணியை மூக்குடைத்த பானுகோம்ஸ்.

சமூக ஆர்வலரும் அரசியல் விமர்ச்சகருமான பானு கோம்ஸ் தனது கருத்துக்களை ஊடகங்கள் மூலமாகவோ, அல்லது சமூக ஊடகங்கள் வழியிலோ தெரிவித்துவருபவர்.

லண்டனில் நீரவ் மோடி கைது செய்யப்பட்டதற்கு சிலர் பத்திரிகை ஆசிரியர்தான் காரணம் என்று சொல்லிவரும் நிலையில் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார் பானு கோம்ஸ்.

அவர் பதிவிட்டுள்ள கருத்துக்கள் பின்வருமாறு :-

கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற வைர வியாபாரி நிரவ் மோடி..லண்டனில் கைது செய்யப்பட்டிருக்கிறார். காவல் மார்ச் 29 வரை நீடிக்கிறது.

மல்லையா வை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதை போல..நீரவ் மோடியும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப் பட இருக்கிறார்.

இதையும் படிக்க:  சிவகங்கை தொகுதியை தவிர்த்து வேட்பாளர்களை அறிவித்தது காங். ராஜாவை எதிர்கொள்ள பயப்பிடுகிறதா காங்கிரஸ்.

இது telegraph-க்கு கிடைத்த வெற்றி அல்ல 🙂 இது.. மோடி அரசுக்கு மட்டுமே கிடைத்த வெற்றி!

UPA ஆட்சியில் ..பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் அள்ளி அள்ளி கடனை கொடுத்துவிட்டு..வாராக் கடன்களாகி ..பொதுத்துறை வங்கிகள் திவாலாகும் நிலைக்கு செல்லும்வரை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக நிர்வாகத்தையும், அரசியலையும் செய்துவிட்டு..

மோடி அரசு வந்த பிறகு..வாராக்கடன்களை வசூலிக்கவில்லை. வெளிநாட்டிற்கு தப்பிவிட்டனர் என்றெல்லாம் அரசியல் செய்துகொண்டிருந்த எதிர் கூட்டணியின் மல்லையா , நிரவ் மோடி பேச்சுகளும்..காற்றில் பறக்கவிடப் பட்ட வெற்று கருப்பு பலூன்களாக ஆகி விட்டிருக்கின்றன 🙂

இனி..மல்லையா என்றோ நீரவ் மோடி என்கிற பேச்சுகளோ கமுக்கமாக மறைக்கப் பட்டு..’மதசார்பற்ற’ என்று கிளம்பிவிடுவார்கள்.

அக் கட்சிகளின் பிரத்தியேக பொருளாதார மேதைகள் ..நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிக்க:  தெறிக்கவிடும் தமிழக அரசு பயத்தில் அரசு ஆசிரியர்கள் , அரசை ஆதரிக்கும் இளைஞர்கள்

அதாவது எதிர்க்கட்சிகள் தங்கள் லாபத்திற்கு ஏற்றவாறு பெயர்களை மாற்றி கொள்வார்கள் என்று கூறி மத சார்பற்ற கூட்டணியின் மூக்கை உடைத்துள்ளார் பானு கோம்ஸ்.

©TNNEWS24

Loading...