இப்போ தெரியுதா மோடி வாஜ்பாயல்ல மோடி மோடிதான் பானுகோம்ஸ் அதிரடி.

மோடி வாஜ்பாயல்ல மோடி மோடிதான் இப்போ தெரியுதா பானுகோம்ஸ் அதிரடி.

சமூகவலைத்தளம்.,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உச்சநீதி மன்றத்தில் மன்னிப்பு கேட்ட பிறகும், மீண்டும் நாட்டின் காவலாளியே திருடன் என மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குற்றசாட்டு நிரூபணமில்லை என நீதிமன்றம் சொன்ன பிறகும் அரசியலுக்காக இதுபோன்ற செயல்களை ராகுல் கையிலெடுத்திருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் ராகுலுக்கு மோடி பொதுக்கூட்டத்தில் அளித்த பதிலடி இனி ராகுல் மோடியைத்திருடன் என கூறுவாரா என சந்தேகம்தான். அந்த அளவிற்கு வெளுத்து வாங்கி இருந்தார் மோடி ராகுலின் தந்தை காலத்தில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டு இப்போது ராஜிவ் திருடனா என்னும் கணக்காய் மோடி ஆவேசமாக பேச வாயடைத்து போனது காங்கிரஸ் தலைமை.

இதையும் படிக்க:  வாக்களிக்க கூடாது எச்சரித்த மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் செருப்பை கழட்டி அடித்து விரட்டிய சிறுவர்களால் பரபரப்பு..

அதற்கு பல காங்கிரஸ் தலைவர்கள் இறந்த ஒருவரை எப்படி விமர்சனம் செய்யலாம் என்ற கேள்வி எழுப்பினர் அதற்கு பானுகோம்ஸ் தனது பதிலை சொல்லியிருக்கிறார், பதில் பின்வருமாறு.


மோடி..ராஜிவ் காந்தியை ஊழல்வாதி என்று சொல்லி விட்டார். 1991-ல் இறந்துவிட்டவரை இழிவு செய்துவிட்டார் என்றெல்லாம் காங்கிரஸ் கட்சி பேசிக் கொண்டிருக்கிறது.

இந்த அறிவு..

நாட்டின் பிரதமரை ..அதிலும் குறிப்பாக ”மக்களால் பெரும்பான்மை ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப் பட்ட” பிரதமரை..பிரதமர் ஒரு திருடன் என்றும்..நாட்டின் காவலாளி ஒரு திருடன் என்றும் பெருங் குரலில் ராகுல் காந்தி தொடர்ந்து தன்னுடைய பரிவாரங்களோடு கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்போது எங்கே போயிற்று ?

ராகுல் எதை விதைத்தாரோ..அதை அறுவடை செய்கிறார்.

மோடி வாஜ்பாயுமல்ல. நேரு குடும்ப வாரிசு என்று அண்ணாந்து பார்த்து தவறுகளை கண்டுகொள்ளாமல் கடந்து போகும் தலைமுறையை சேர்ந்த அரசியல்வாதியுமல்ல.

இதையும் படிக்க:  மீண்டும் ஆட்சியமைக்க போவது பாஜக எப்படி தெரியுமா ?

மோடி 200% அரசியல்வாதி. நேரு குடும்பம், வாரிசு போன்ற பெருமையெல்லாம் அவரிடம் எடுபடுவதில்லை என்பதே எதார்த்த நிலை.

இவ்வாறு பானுகோம்ஸ் தனது கருத்தை வெளிப்படுத்துயுள்ளார்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...