பதில் சொல்ல தைரியம் இருக்கிறதா? பானுகோம்ஸ் நெத்தியடி கேள்வி

காங்கிரஸ் கட்சியினர் யாருக்காவது பதில் சொல்ல தைரியம் இருக்கிறதா? பானுகோம்ஸ் நெத்தியடி கேள்வி

டெல்லி.,

ராகுல் காந்தியின் குடியுரிமை விவகாரம்7 தற்போது பொது மக்கள் மத்தியிலும் கடும் விவாதத்தை எழுப்பியுள்ளது, சுப்ரமணியசாமி சரியான ஆவணங்கள் மூலம் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டிலும் குடியுரிமை பெற்றவர் என்ற ஆவணங்களை உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளார். இதுகுறித்து உள்துறை அமைச்சகம் ராகுலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் அரசியல் விமர்ச்சகர் பானுகோம்ஸ் காங்கிரஸ் கட்சியை நோக்கி தனது மனதில் தோன்றும் கேள்விகளை எழுப்பியுள்ளார், அவை என்னவென்று தற்போது பார்க்கலாம்.

ராகுல் பிரிட்டிஷ் குடிமகனா …அல்லது இந்தியாவின் குடிமகனா என்கிற பிரச்சினை முழுமையாக மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இந்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

அடிப்படை இருந்தால் ஒழிய …இது போன்ற சந்தேகங்களை போகிற போக்கில் எழுப்பிவிட இயலாது.

இக் குற்றச்சாட்டுக்கான முகாந்திரங்களாக சுப்ரமணிய சாமியால் சமர்பிக்கப்படும் தரவுகள் என்னென்ன ?

  1. பிரிட்டனில் ..2003 ம் வருடம்..Backops Limited என்கிற நிறுவனம் பதிவு செய்யப் பட்டபோது..அதன் இயக்குனர்களில் ஒருவரான ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டு குடிமகன் என்று பதிவு செய்யப் பட்டது.
  2. அந்த நிறுவனத்தின் அக்டோபர் 10, 2005ம் வருட வருடாந்திர ரிப்போர்ட்டில் .. மீண்டும் ராகுல் காந்தியை இங்கிலாந்து நாட்டு குடிமகன் என்றே குறிப்பிடப் பட்டிருக்கிறது. மேலும்,அவரின் பிறந்த தேதி ஜூன் 19, 1970 என்கிற விபரமும் கொடுக்கப் பட்டிருக்கிறது.
  3. அக்டோபர் 31, 2006-ம் வருட ரிப்போர்ட்டிலும் ராகுல் காந்தியை இங்கிலாந்து நாட்டு குடிமகன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:  கரூர் தொகுதியில் யார் வெற்றிபெற யாருக்கு வாய்ப்புள்ளது ?

இதற்கு விளக்கம் தரவேண்டிய பொறுப்பு ராகுலுக்கு உண்டு.

ஆனால்..கொடுக்கப்படுகிற விளக்கம் என்ன ?

இங்கிலாந்து குடிமகன் என்று தவறுதலாக கொடுக்கப் பட்டுவிட்டது என்று காங்கிரஸ் கட்சியும், ராகுலும் கூறுகிறார்கள்.

யாராவது தான் எந்த நாட்டு குடிமகன் என்னும் கேள்விக்கு தவறுதலாக பதிலளிப்பார்களா ?? என்கிற கேள்வி நியாயமானது.

சரி..அப்படியே தவறுதலாக கொடுக்கப்பட்டுவிட்டது என்றே வைத்துக் கொண்டாலும்.. 2005, 2006 என்று தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் அதே தவறு நடந்தது எப்படி ??

இவ் விவகாரம் குறித்து ஏன் முன்னரே கேள்வி எழுப்பவில்லை ? என்கிற கேள்விக்கு..

இது குறித்து 2015 ம் வருடம் எம்.எல் .சர்மா என்கிற வழக்கறிஞர் பொது நல வழக்கு தாக்கல் செய்கிறார்.

இதையும் படிக்க:  பிரதமருக்கு எதிரான செயல்பாடு வைகோவை எச்சரித்த ஜான் பாண்டியன்..

இப் பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல்..அதை பொருளற்றது என்று நவம்பர் 30ம் தேதி வழக்கை தள்ளுபடி செய்கிறார்கள்…அப்போதைய தலைமை நீதிபதி H.L.Dattu & நீதிபதி அமிதவா ராய்.

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி மீண்டும் மீண்டும் வழக்கறிஞர் வலியுறுத்திய போது, எரிச்சலடைந்த தலைமை நீதிபதி H.L.Dattu ..”நான் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. வீணாக இப் பொதுநல வழக்கை தாக்கல் செய்ததற்காக பெரும் அபராதத்தை உங்களுக்கு விதிக்கும்படி செய்துவிடாதீர்கள் ” என்று நீதிமன்றத்திலேயே கூறியதாகவும் The Hindu ஆங்கில செய்தி கூறுகிறது . இரண்டு நாட்கள் கழித்து டிசம்பர் 2 ம் தேதி பணியிலிருந்து H.L.Dattu ஓய்வு பெற்றார்.

இதையும் படிக்க:  இந்த இருவரில் ஒருவர்தான் H. ராஜாவை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்.

அதனால் தேர்தல் நேர அரசியல் பழிவாங்கல் என்று சொல்வதற்கும் இயலாது.

மிக முக்கிய கேள்வியான இதற்கு .. அரசின் விசாரணைக்கும், இந்திய மக்களுக்கும் சரியான முறையில் விளக்கம் தர வேண்டிய கட்டாயம் ராகுலுக்கு உண்டு.

இவ்வாறு பானுகோம்ஸ் தனது கருத்தினை தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் பதில் சொல்வாரா? அல்லது யாரேனும் ஒரு காங்கிரஸ் தரப்பினராவது பானுகோம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல தைரியம் இருக்கிறதா என வலதுசாரிய கருத்துள்ள இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...