ஏன் பாஜக வெற்றி வேண்டும் இணையத்தில் வைரல் ஆகும் யாதவ சமுதாய இளைஞர் எழுதிய பதிவு

பாஜக வெற்றி வேண்டுமா கூடாதா? இணையத்தில் வைரல் ஆகும் யாதவ சமுதாய இளைஞர் எழுதிய பதிவு.

இராமநாதபுரம்.,

கேசவராமன் யாதவ் என்ற இளைஞர் தனது facebook பக்கத்தில் எழுதிய பதிவு இன்று யாதவ சமுதாய மக்களை கடந்து அனைத்து தரப்பினரையும் சென்றடைந்துள்ளது.

அவர் எழுதிய பதிவு பின்வருமாறு :-

என் யாதவ நண்பா யாதவ சமுதாயத்தை அனைத்து கட்சிகளும் புறக்கணித்து விட்டதாக உன் கோபம் நியாயமான ஒன்று.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தேவநாதன் யாதவ் ஜிக்கு பாஜக யாதவர்கள் அதிகம் வசிக்கும் 20 தொகுதிகளை கொடுத்தது.

நம் இன சொந்தங்கள் எத்தனை வாக்குகள் அளித்தார்கள்?கருணாஸுக்கு வாக்களித்த மக்கள் தேவநாதன் யாதவ்ஜியை புறக்கணித்தார்கள். உங்களை மன்றாடி கேட்கிறேன் இப்போது நம் எதிரில் நிற்பவர் தேவரோ,கவுண்டரோ,நாயுடுவோ இல்லை.

நாம் சாதி பார்த்து வாக்களிக்க நம் ஹிந்து சமயம் தலை நிமிர்ந்தால் தான் நான் வெள்ளாளராகவும், நீங்கள் யாதவராகவும், நம் நண்பர்கள் தேவராகவும் சாதி பெருமை பேசி திரிய முடியும்.

இதையும் படிக்க:  கட்சி ஆரம்பிச்சதே காங்கிரஸ் அழிக்கதான்னு வந்த என்ன ஆச்சு சிக்கி சின்னாபின்னமாக சீமான் கொடுக்கையூரில் பரபரப்பு.

நம் எதிரிகள் பலம் பெற்று ஹிந்து சமயம் அழிந்தால் நம் சாதிகளுக்கு அங்கே இடம் இல்லை. மற்ற சமுதயங்களை ஓப்பிடும் போது யாதவ சமுதாயம் மதம் மாறாமல் ஹிந்து சமயத்தை கடைபிடிக்கும் ஒரு உன்னத சமுதாயம் என்ற பெருமை கொண்டது.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடின் அனைவருக்கும் தாழ்வு. எங்கள் பகுதியில் சிறிய அளவில் வசிக்கும் யாதவ சமுதாய மக்களுடன் நாங்கள் அண்ணன், தம்பிகளாக உறவு முறையில் பழகி வருகிறோம்.

யாதவருக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை யாதவர் பிரச்சனையாக பார்ப்பதில்லை.ஒரு ஹிந்து சகோதரனின் பிரச்சனையாகத்தான் பார்க்கிறோம்.

சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உள்ள ஹிந்து சமயத்தில் உள்ள அனைத்து சமுதயங்களும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறோம்.

இதையும் படிக்க:  இந்த இருவரில் ஒருவர்தான் H. ராஜாவை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்.

கோவிலில் வழிபட ,மேளம் அடிக்க,சாமி ஊர்வலம் போக,தேர் இழுக்க இது போன்ற பிரச்சனைகள் குமரியிலும் நாங்கள் சந்தித்தோம்.இப்போது ஹிந்து வாக்கு வங்கியை உருவாக்கியதால் நிம்மதியாக இருக்கிறோம்.

எங்கள் பாராளுமன்ற உறுப்பினர் 4000 கோடிக்கு திட்டங்களை கடந்த 5 வருடங்களில் கொண்டு வந்திருக்கிறார்.

ஆசியாவில் மிகப்பெரிய இரண்டு மேம்பாலங்கள் இப்போது எங்கள் ஊரில். கேரளா செல்ல முன்பு 3 மணி நேரம் ஆகும்.இப்போது 1மணி நேரத்தில் செல்ல முடியும்.புதிதாக 40 கி.மீ நான்கு வழி சாலை அமைத்திருக்கிறார். இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

நெல்லை.. தூத்துக்குடி.. திருவனந்தபுரம் ரயில் பாதை இரட்டை வழிதடமாக மாற இருக்கிறது இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்திருக்கிறது.

இதையும் படிக்க:  தீவிரவாதியை அடித்தால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது , கிழித்தெடுத்த மோடி

எங்கள் தொகுதியில் ESI மருத்துவமனை,விமானநிலையம் அமைய இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
துறைமுக பணிகள் நில அளவை பணிகள் நடந்து வருகிறது. இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

நயினார்நாகேந்திரன் அவர்கள் தேவர் சமுகத்தை சார்ந்தவராக இருந்தாலும் நெல்லை,குமரியில் அனைத்து சமுதாய மக்களின் நன் மதிப்பை பெற்றவர்.

நம் சமுதாயத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் தைரியமாக முதல் ஆளாக களத்தில் நிற்பவர். அது போலத்தான்

ஹச்_ராஜா ஜி அவர்களும் ஒருங்கிணைந்த ஹிந்து சமுதாயமே அவர்கள் பேச்சு, உயிர் மூச்சு.

ஒருமுறை கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து பாஜகவை ஆதரியுங்கள்.

இவ்வாறு அவர் தனது பதிவின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பதிவானது தற்போது யாதவ சமுதாயத்தினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

©TNNEWS24

Loading...