கேரளாவில் பாஜக எத்தனை தொகுதிகளை வெல்லும் தேர்தலுக்கு பின்பு வெளியான மெகா சர்வே முடிவுகள் !

கேரளாவில் பாஜக எத்தனை தொகுதிகளை வெல்லும் தேர்தலுக்கு பின்பு வெளியான மெகா சர்வே முடிவுகள் !

கேரளம்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரத் தர்ம ஜனசேனா உள்ளிட்ட கட்சிகள்கேரளாவில் அதன் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இம்மாநிலத்தில் ஏப்ரல் 23-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது.  
இந்நிலையில் கேரளாவில் மக்களவைத் தேர்தலில் மக்களின் கருத்துக்களை அறியும் போல் ரிசர்சர் நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதில் காங்கிரஸ் தலைமையிலான அணி, கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 11 இடங்களை கைபற்றும் எனத் தெரிவித்துள்ளது போல் ரிசர்ச்சர் . மேலும் 5 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என்றும் அதில் 2 இடங்களை காங்கிரஸ் அணி பெற வாய்ப்புள்ளதாகவும் மீதமுள்ள இரண்டு இடங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுவதாக தெரிவித்துள்ளது .

இதையும் படிக்க:  பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் பிரபல வெளிநாட்டு நிறுவனம் போல் ரிசர்ச் முடிவுகளை வெளியிட்டது .

அதேசமயம் மாநிலத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி 3 இடங்களில் மட்டுமே வெல்லும் என கருத்து கணிப்பு முடிவுகள் மூலம் தெரிவித்துள்ளது.

பாஜகவை பொறுத்தவரை இந்த முறை திருவனந்தபுரம் தொகுதியில் வெற்றி பெரும் என்று போல் ரிசர்ச்சர் கணிப்பு தெரிவிக்கிறது. அதேசமயம் சபரிமலை போராட்டத்தால் பத்தனம் திட்டா, திருச்சூர் போன்ற தொகுதிகளில் பெருமளவு பாஜகவிற்கு வாக்கு அதிகரித்துள்ளதாகவும் அந்த தொகுதியில் காங்கிரஸ் – பாஜக இடையே நேரடி போட்டி நிலவுவதாகவும் இடதுசாரிகள் மூன்றாம் இடம் பிடிக்கும் என்று கணித்துள்ளது போல் ரிசர்ச்சர்.

 RESULT.

பாஜக கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தை கைப்பற்றும் என்றும் திருச்சூர் தொகுதியில் பாஜக காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நிலவுவதாகவும், பத்தினம் திட்டாவில் இடதுசாரிகளை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாம் இடம் பிடிக்கும் என்றும் போல் ரிசர்ச்சர் நிறுவனம் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளது .

இதையும் படிக்க:  உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் யாருக்கு எத்தனை தொகுதி கிடைக்கும் சர்வே முடிவுகள் வெளியானது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று மெசேஜ் அனுப்பவும்.

Loading...