உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் யாருக்கு எத்தனை தொகுதி கிடைக்கும் சர்வே முடிவுகள் வெளியானது.

சமுகவலைத்தளம்.,

முக்கிய குறிப்பு இங்கு வெளியிடப்படும் சர்வே முடிவுகள் மக்களிடம் நேரடியாக சென்ற தேர்தலுக்கு பிறகு கள ஆய்வு நடத்தி சேகரித்தது அல்ல கடந்தமுறை தேர்தல் முடிவுகளை சரியாக கணித்தவர்கள், மற்றும் சில அரசியல் பார்வையாளர்களின் கருத்துக்களை ஆலோசித்து முடிவினை வெளியிடுகிறோம்.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில் , இந்த 7 கட்டங்களிலும் உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதுவரை 5 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் உத்தரபிரதேசத்தில் 53 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது மீதமுள்ள 27 தொகுதிகளுக்கு அடுத்த 2 கட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.

உத்தரப்பிரதேசத்தை பொறுத்தவரை அங்கு இப்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது மேலும் இந்த ஆட்சியில் இதுவரை மக்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்ப்பு அலை உருவாகவில்லை.

இதையும் படிக்க:  திடீர் திருப்பம் காவி கொடியுடன் கேதார்நாத் சென்ற மோடி !எதிர்க்கட்சிகள் அலறல்.

80 தொகுதிகளை கொண்ட மிகப்பெரிய மாநிலம் என்பதால் இந்த மாநிலத்தில் வெற்றிபெறுவது ஆட்சி அமைக்க மிகவும் முக்கியமானது.

கடந்த 2014 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இங்குள்ள 80 தொகுதிகளில் 72 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.

ஆனால் இந்த முறை அந்த அளவிற்கு தொகுதிகளை கைப்பற்றுவது மிகவும் கடினம் காரணம் உத்தரப்பிரதேசத்தின் மிக பெரிய இரண்டு மாநில கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளனர்.

இந்த கூட்டணியில் காங்கிரஸ் இணையாமல் விட்டது காங்கிரஸ் கட்சிக்கு மிக பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நாம் எடுத்த தரவுகளின்படி உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 53 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் சென்றமுறை பாஜக 72 தொகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  ஒத்த பைசா திருடல .. எதிரிகள் மொத்தமா வரட்டும் ஒருகை பாத்திரலாம் சூளுரைத்த மோடி

24 தொகுதிகளை பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி கைப்பற்றும் வெறும் 3 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றும்.

அந்த 3 தொகுதிகளில் ராகுல் காந்தியின் அமேதி , சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியும் அடங்கும் இவர்கள் போட்டியிடவில்லை என்றால் அந்த தொகுதிகளை கூட காங்கிரஸ் இழந்திருக்க வாய்ப்புள்ளது என்றே தெரிகிறது மேலும் இந்த முறை அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணி ராகுலுக்கு கடுமையான போட்டி அளிப்பார் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த முறை பெற்றதைவிட 19 தொகுதிகளை பாஜக குறைவாக பெற்றாலும் 53 தொகுதிகள் என்பது பாஜக ஆட்சியமைக்க முக்கிய பங்கு வகிக்கும் என்றே தெரிகிறது நமது கணிப்பில் பாஜக 5 தொகுதிகள் குறைவாக கிடைக்கலாமே தவிர 48 தொகுதிகளுக்கு கீழ் பாஜக செல்ல வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

இதையும் படிக்க:  அடேங்கப்பா மோடியை வீழ்த்தியே தீருவேன் என்று நாடுமுழுவதும் சுற்றிய சந்திரபாபுநாயுடுவிற்கு தெலுங்கானா மக்கள் என்ன ரிசல்ட் கொடுத்துருக்காங்கனு தெரியுமா!

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...