சாதாரண தொண்டனை முதல்வராக உயர்த்திய பாஜக சாதி குடும்ப அரசியல் இல்லாத கட்சி பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி .

சாதாரண தொண்டனை முதல்வராக உயர்த்திய பாஜக சாதி குடும்ப அரசியல் இல்லாத கட்சி பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி !

கோவா

கோவா முதல்வராக பதவிவகித்த மனோகர் பாரிக்கர் தனது 63 வயதில் நேற்று முன்தினம் கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். நேற்று மாலை 5 மணி அளவில் அவரது இறுதி சடங்கு நடைபெற்றது அதில் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் நேற்றே ஆளுநரை சந்தித்து தங்களை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும் என்று கட்டாய படுத்தியதால் உடனடியாக தங்கள் அரசாங்கத்திற்கு புதிய முதல்வரை தேர்வு செய்யும் கட்டாயம் பாஜகவிற்கு ஏற்பட்டது.

இதையும் படிக்க:  (#வீடியோ உள்ளே )ராகுல் கல்லூரி நிகழ்ச்சியில் விண்ணை பிளந்த மோடி மோடி கோசம் வேறுவழியின்றி சரண்டரான ராகுல்.

40 பேர் கொண்ட கோவா சட்டசபையில் பா.ஜ.கவிற்கு மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். கோவா பார்வர்டு கட்சியில் 3 பேர், எம்.ஜி.பி. கட்சியில் 3 பேர், சுயேச்சைகள் 3 பேர் என கூடுதலாக 9 பேருடன் 21 உறுப்பினர்கள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி செய்து வருகிறது. 

இதனால் MLA அனைவரிடத்திலும் அமிட்ஷா தனித்தனியா ஆலோசனை செய்து கோவா சட்ட சபையின் சபாநாயகராக இருந்த பிரமோத் சாவத்தை கோவாவின் புதிய முதல்வராக தேர்வு செய்து அறிவித்தார். இதனால் நேற்று இரவு 11 மணி அளவில் பிரமோத் பதவியேற்று கொண்டார்.

ப்ரமோட் அரசியலில் குடும்ப பின்னணி இன்றி தொண்டராக வலம்வந்தவர், மேலும் அவர் சமூகம் அங்கு மிக பெரிய வாக்கு வங்கிகளை கொண்டதல்ல எனவே ஒரு சாதாரண தொண்டனுக்கு முதல்வர் பதவி அளித்திருக்கிறது பாஜக.

இதையும் படிக்க:  4 வருட முடிவில் இதை நான் செய்வேன் அன்றே சொன்ன மோடி.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

சமூக வலைத்தளங்களில் இதனால்தான் நாங்கள் பாஜகவை ஆதரிப்பதாக பலரும் சந்தோசங்களை பகிர்ந்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...