பாஜக முதியவர் கொலையை தொடர்ந்து மற்றுமொரு சம்பவம் சோபியாவிற்கு விடிய விடிய விவாதம் நடத்திய ஊடகங்கள் எங்கே?

பாஜக முதியவர் கொலையை தொடர்ந்து மற்றுமொரு சம்பவம் சோபியாவிற்கு விடிய விடிய விவாதம் நடத்திய ஊடகங்கள் எங்கே?

செய்தி பிரிவிற்கு வந்த தகவலை மாற்றம் ஏதும் செய்யாமல் அப்படியே பதிவிட்டிருக்கிறோம்

திருச்சி மாவட்டத்தில் KK நகர் காவல் நிலைய பகுதியில் உள்ள சாத்தனூர் என்ற ஊரில் அதிமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து தென்றல் நகர் கூட்டுறவு சங்கத் தலைவரும் ஆஇ அதிமுகாவின் 38 வது வட்டத்தின் பொறுப்பாளராகவும் உள்ள R.கந்தசாமி என்பவர் வாக்கு சேகரிக்க சென்றார்.

இவர் நேற்று (14-4-2019) அன்று காலை 11 மணிக்கு அதிமுக சார்பில் திருச்சி பாராளுமன்ற வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தேமுதிகாவின் டாக்டர் இளங்கோவனை ஆதரித்து சாத்தனூரில் வாக்கு சேகரிக்க பொது மக்களோடும் சில கூட்டணி கட்சி தொண்டர்களோடும் சென்றார்.

இதையும் படிக்க:  தேர்தல் முடிந்த சூழலில் நாமக்கல் தொகுதியில் வெற்றிபெறப்போவது யார் ? பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

சாத்தனூரில் உள்ள அமமுகாவை சேர்ந்த ரவுடி சங்கத் தலைவரான ராமலிங்கம் மற்றும் துணைத் தலைவர் பால்ராஜ் அவர்களின் தூண்டுதலின் பெயரில் கூலிப்படையைச் சேர்ந்த மதி,எல்லத்துரை மற்றும் பழனியாண்டி ஆகிய ரவுடிகள் ஒட்டு சேகரித்துக் கொண்டு இருந்த கந்தசாமியை வழிமறித்து வாங்குவாதம் செய்து உள்ளனர்.நீ எப்படி பிஜேபி கூட்டணி கட்சிக்கு ஒட்டு கேட்டு வரலாம்.என்று இவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.பின்பு அரிவாள்,கோடாரி போன்ற ஆயுதங்களால் இவரை தாக்கி உள்ளனர்.மேலும் கடப்பாரை மூலம் இவரது இரு கால்களை உடைத்து உள்ளனர் அமமுகாவை சேர்ந்த ரவுடிகள் தாக்கியதில் கை முறிந்தும்,தலையில் பலத்த அடி பட்டு ரத்தவெள்ளத்தில் கந்தசாமி சரிந்தார் .

பிஜேபி கூட்டணி கட்சிக்கு ஒட்டு கேட்க சென்ற அதிமுக தொண்டரை ரவுடிகள் தாக்கி அவரை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.பிறகு அருகில் உள்ள பொது மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

இதையும் படிக்க:  பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டார் பாண்டே தமிழகத்தில் இதுதான் முதல்முறை. முதல் கட்டத்தில் யார் முந்துவது.

இப்படி வன்முறையில் ஈடுபட்ட ரவுடிகளை மட்டும் கைது செய்த காவல்துறையினர் இந்த தாக்குதலுக்கு காரணமான சாத்தனூரைச் சேர்ந்த ராமலிங்கம் மற்றும் பால்ராஜை கைது செய்யாமல் காவல்துறையினர் உள்ளனர்.சாத்தனூரை சேர்ந்த சிவா என்பவர் காவல்துறையினரையே மிரட்டியதால் காவல்துறையினர் பாலராஜ் மீதும் ராமலிங்கம் மீதும் வழக்கு பதியாமல் உள்ளனர்..எப்படி பிஜேபி கூட்டணி கட்சிக்கு ஒட்டு கேட்டு வரலாம் என்று இவரை தாக்கிய ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்யும் வரை இந்த செய்தியை share பண்ணுங்க..

இதே போல சில நாட்கள் முன்பு அமமுகவைச் சேர்ந்த ரவுடிகள் ராமநாதபுரம்.வேட்பாளரான நயினார் நாகேந்திரன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறிப்பிடத்தக்கது.

அமமுகாவின் ரவுடீசம் தொடர்ந்து கொண்டே இருந்தால் இன்னும் பல அப்பாவிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது..ஆகவே இந்த தாக்குதலை பின்நின்று நடத்திய ரவுடிகளை கைது செய்யுமாறு காவல் துறையை கேட்டுக்கொள்கிறோம்..தாக்குதலுக்கு உள்ளான கந்தசாமியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இதையும் படிக்க:  பாஜக வேட்பாளரை தாக்க வந்த SDPI கட்சியினர் கலவரபூமியான இராமநாதபுரம்.

இவ்வாறான பதிவு எங்களது செய்தி பிரிவிற்கு வந்தது அதனை ஆராய்ந்து விசாரித்து செய்தியில் உண்மை தன்மை இருப்பதை கருத்தில் கொண்டு அந்த தகவலினை மாற்றாமல் அப்படியே இங்கு பதிவிட்டிருக்கிறோம்.

செய்தியினை அளித்த நபர் தமிழிசை சோபியா மீது புகார் அளித்ததற்கு விடிய விடிய விவாதம் நடத்திய ஊடகங்கள் ஏன் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி தொண்டர்கள் கொலை, செய்யப்படுவதை தண்டிக்கவில்லை என ஆவேசமுடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

©TNNEWS24

Loading...