மீண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது மோடியின் அலை வெளியானது சி வோட்டர் நடத்திய இரண்டாம் கட்ட கருத்து கணிப்பு !

மீண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது மோடியின் அலை வெளியானது சி வோட்டர் நடத்திய இரண்டாம் கட்ட கருத்து கணிப்பு !

டெல்லி.,

“சி வோட்டர்” மற்றும் “ஐ.ஏ.என்.எஸ்”. நிறுவனங்கள் ‘The state Of the Nation’ என்ற தலைப்பில் மார்ச் மாதத்தில் இரண்டு கட்டங்களாக மக்களிடம் கருத்துக்கணிப்புகள் நடத்தின.

இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு நேற்று டெல்லியில் வெளியிடப்பட்டது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 42 % வாக்குகளை பெறும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 30.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் தேர்தலில் பாஜக கூட்டணி வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது , ஏழ்மை ஒழிப்பு , பொருளாதார முன்னேற்றம் ஆகியவை குறித்து தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டால் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  ஸ்மிருதி இராணிக்கு பயந்து வயநாட்டில் தஞ்சம் அடைந்த ராகுல் அங்கும் களம் இறங்குவோம் பாஜக அதிரடி.

வரும் தேர்தலில் பாஜக மட்டும் தனித்து 264 இடங்களிலும் கூட்டணியுடன் சேர்ந்து 305 இடங்களிலும் வெற்றி பெறும் என்று இந்த சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த முறை உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 28 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என்றும் , அகிலேஷ், மாயாவதி கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்றும் கருத்து கணிப்பில் வெளியாகியுள்ளது மேலும் குஜராத், மஹாராஷ்டிரா , ஹரியானா போன்ற மாநிலங்களில் பாஜக அதிக தொகுதிகளில் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தென்னிந்தியாவில் கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. மேலும் மார்ச் மாத தொடக்கத்தில் வெளியான கருத்து கணிப்பில் பாஜக தலைமையிலான கூட்டணி 264 இடங்களில் மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையும் படிக்க:  பாஜக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு வேட்பாளர்கள் யார்? முழுவிபரம்?

ஆனால் தற்போது பாஜக கூட்டணிகள் மொத்தமாக 305 இடங்களில் வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாளுக்கு நாள் மோடியின் செல்வாக்கு மக்களிடத்தில் அதிகரித்து வருவதாகவும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு மோடியின் செல்வாக்கு அதிகரித்து தனி பெரும்பான்மை பெறுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

©TNNEWS24

Loading...