விழுப்புரத்தில் வன்னியர், தலித் சமூகத்தினரிடையே மோதல் தூண்டிவிட்டது திருமாவளவனா?

விழுப்புரம் அருகே உள்ள பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்றது அப்போது அங்கு வன்னியர் சமூகத்தை புகழும் வகையில் பாடல் பாடப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கல் வீசி தாக்கினர் , இதனால் கோபமடைந்த வன்னியர் சமூகத்தை சார்ந்த இளைஞர்கள்,

தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கினர் அதை தொடர்ந்து இருதரப்பினர் இடையே பதற்றம் அதிகரித்ததால்.

அங்கு வந்த காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர் , தங்கள் மீது தாக்குதல் நடத்திய வன்னியர் சமூகத்தினரை கைது செய்யக்கோரி

தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது

இதையும் படிக்க:  இந்துகளின் வாக்குகளை இழந்த திமுக வேறு வழியின்றி திருமாவளவனை கழட்டிவிட முடிவு.

இந்த தாக்குதலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் திட்டமிட்டு நடத்தியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளதால் அங்கு மீண்டும் ஒரு பாமக விசிக சண்டை உருவாகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...