இரண்டாம் கட்ட கருத்து கணிப்பு முடிவுகள் யாருக்கு வெற்றி வாய்ப்பு பாண்டே சொல்வது என்ன ?

சமூகவலைத்தளம்.,

பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தனது சாணக்யா டிஜிட்டல் தொலைக்காட்சி மூலமாக நேற்றில் இருந்து கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறார், அந்தவகையில் இன்று, தர்மபுரி, சேலம், ஆரணி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், நாமக்கல், விழுப்புரம் ஆகிய 8 – தொகுதிகளுக்கான கலந்தாய்வு முடிவினை வெளியிட்டுள்ளார்.

இந்த முறை பாண்டே கருத்து மற்றும் கணிப்பு ஆகிய இரண்டையும் களம் நிலவரத்தின் அடிப்படையில் இரண்டாக பிரித்துள்ளார், என்பது இங்கு முக்கியமாக பார்க்க பட வேண்டியது.

விழுப்புரம் (தனி )

விழுப்புரம் தனி தொகுதியை பொறுத்தமட்டில் இங்கு விடுதலை சிறுத்தைகளின் பொது செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார், பாமக சார்பில் வடிவேல் இராவணன் களத்தில் உள்ளார் இருவருக்குமான போட்டி கடுமையாக இருக்கும் என்றும், கணிப்பின் அடிப்படையில் ரவிக்குமார் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

இதையும் படிக்க:  பதிவான வாக்குகள் யாருக்கு வெற்றியை தேடித்தரும்? தினகரன், கமல், சீமான் வெற்றிவாய்ப்பு எப்படி பாண்டே வெளியிட்ட புது கணிப்பு.

ஆனால் இங்கு திமுகவினர் களப்பணியாற்றாமல் அருகில் இருக்கும் கள்ளக்குறிச்சி தொகுதிக்கு சென்று இருப்பதால், இங்கு பாமக வலுவான முறையில் களப்பணியினை ஆற்றிவருகிறது எனவே பாமக வெற்றி பெறவும் வாய்ப்பு இருப்பதாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

சேலம்

சேலம் முதலமைச்சர் தொகுதி என்பதால் அதிகம் கவனம் பெறுகிறது இங்கு அதிமுக வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், வெற்றி எளிதில் அமையாது என்றும் கணித்திருக்கிறார்கள்.

வேலூர்.

வேலூர் தொகுதியை பொறுத்தமட்டில் திமுக வெற்றி பெரும் என்று கணிப்புகள் சொல்லி இருந்தாலும் AC. சண்முகம் வெற்றிபெற வருமான வரி சோதனைக்கு பிறகான மக்கள் மனதில் மாற்றம் இருப்பதாகவும் கணித்துள்ளனர்.

நாமக்கல்.

கொங்கு மண்டலத்தின் முக்கிய பகுதி என்பதாலும், அதிமுகவின் வாக்கு வங்கி அதிகமாக இருப்பதனாலும் இங்கு அதிமுக வெற்றபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணித்துள்ளார் அதே நிலையில் போட்டி மிக கடுமையாக இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் படிக்க:  பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டார் பாண்டே தமிழகத்தில் இதுதான் முதல்முறை. முதல் கட்டத்தில் யார் முந்துவது.

தருமபுரி

பாமக சார்பில் அன்புமணி போட்டியிடுவதால் இந்த தொகுதி ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளது. இங்கு அன்புமணி வெற்றி பெறுவார் என்றும் 1% வாக்குகள் வித்தியாசம் மட்டுமே இருப்பதும் அன்புமணி இன்னும் அதிகமாக களப்பணி ஆற்ற வேண்டிய சூழல் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

அதே சூழலில் இங்கு போட்டியிடும் தினகரன் கட்சியை முன்னாள் அமைச்சர் பழனியப்பன் 17% வாக்குகளை பெறுவார் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

ஆரணி.

ஆரணி தொகுதியை பொறுத்தமட்டில் திமுக கூட்டணியே அதிக வாக்குகளை கைப்பற்றும் என்று கணித்திருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி.,

கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிகவின் சார்பில் சுதீஷ் போட்டியிடுவதால் இங்கு அதிக முக்கியத்துவம் நிலவுகிறது இருப்பினும் இங்கு திமுக கூட்டணியே வெற்றிபெறும் என்று கணித்திருக்கிறார்கள்.

இதையும் படிக்க:  வீடியோ எப்படி கிடைத்தது.. ஏன் ஊடகங்கள் வெளியிடவில்லை அடுத்தது என்ன -பாண்டே

திருவண்ணாமலை.

இங்கு கணிப்புகள் திமுக முந்தினாலும் அதிமுகசார்பில் முக்கிய வேட்பாளர் அக்கினி கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுவதால் இழுபறியான சூழல் நிலவுவதாக கணித்திருக்கிறார்கள்.

8 தொகுதிகளுக்கான முடிவில்

அதிமுக + ( தருமபுரி, சேலம், நாமக்கல் ) தொகுதிகளையும்

திமுக + ( விழுப்புரம், ஆரணி, கள்ளக்குறிச்சி ) தொகுதிகளையும்.

திருவண்ணாமலை, வேலூர் தொகுதிகளில் மக்கள் மனநிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்றும் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

©TNNEWS24

Loading...