காவி மயமாகிறதா தமிழகம் எதிர்த்து கூடிய கூட்டத்தால் பதற்றத்தில்

சென்னை

திராவிடர் கழகத்தின் தலைவரான கி. வீரமணி சுயமரியாதை , கடவுள் மறுப்பு , மதசார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தையும் , இந்து கடவுள்களையும் தொடர்ந்து இழிவு படுத்தி வருகிறார் என்று இந்து அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன.

மற்ற மதங்களுக்கு ஆதரவாகவும் , இந்துக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்படுவதால் சமீபகாலத்தில் இந்து அமைப்புகள் இவரை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீரமணி இந்து கடவுள் கிருஷ்ணரை கடுமையாக விமர்சித்தார் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பேசினார்.

அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள சூழலில் இந்து அமைப்புகள், யாதவ சமூகத்தை சார்ந்தவர்கள் தங்களின் கடவுளான கிருஷ்ணரை இழிவுபடுத்திய வீரமணியை கைது செய்ய கூறியும் , திராவிடர் கழகத்தை தடை செய்யக்கோரியும் இன்று சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க:  திருவாரூர் பக்கமே போக கூடாது பிரசன்னாவிற்கு வந்த சோதனை?

தமிழகத்தில் இந்துக்களை இழிவுபடுத்துபவர்களை எதிர்த்து போராட்டம் நடைபெறுவது அரிது , இதற்கு முன்னர் தி.க.வினர் தாலி அறுப்பு போராட்டம் , மாட்டை வெட்டி சமைத்து சாப்பிடுவது , கிருஷ்ணர், ராமரை இழிவுபடுத்துவது போன்ற பல போராட்டங்களை செய்துள்ளனர். அப்போதெல்லாம் அவர்களுக்கு எதிராக மிக பெரிய அளவில் எதிர்ப்பு நடைபெறவில்லை.

ஆனால் இன்று வீரமணிக்கு திராவிடர் கழகத்திற்கும் எதிராக மக்கள் கூடி போராட்டம் நடத்துவது இந்து மத உணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதை காட்டுகிறது.

தேர்தல் சமயத்தில் திராவிடர் கழகத்திற்கு எதிராக மக்கள் திரள்வதால் திமுகவும் அதன் வேட்பாளர்களும் பதற்றத்தில் உள்ளனர்.

ஏற்கனவே திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பலரும் கூறிவரும் நிலையில் இந்த சம்பவம் திமுகவிற்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:  சிதம்பரம் களவாணி பட்டம் வாங்கிட்டார், தாமரைதான் ஜெயிக்கும் இணையத்தில் வைரல் ஆகும் செருப்புத்தைக்கும் தொழிலாளியின் வீடியோ

©TNNEWS24

Loading...