சென்னை வேலை சென்னைவாசிகளுக்கு மற்ற மாவட்ட மக்கள் உடனடியாக வெளியேற எச்சரிக்கை ! சீமானின் கனவு நிறைவேறியது

நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ஒரு வாக்கியம் ட்ரெண்ட் ஆனது அது தமிழகத்தின் வேலை தமிழருக்கே என்பது தான்.

இது நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ் தேசிய போராளிகளால் உருவாக்கப்பட்டு வெகு விரைவாக பரவியது ஆனால் இது பரவிய சில மணிநேரங்களிலேயே இதன் திசை மாறியது.

முதலில் சென்னையில் உள்ள வேலை சென்னை வாசிகளுக்கே மற்றவர்கள் வெளியேறுங்கள் என்று சிலர் சொல்ல அதை சென்னை வாசிகள் அனைவரும் சொல்ல ஆரம்பித்தனர்.

பின்னர் தமிழகத்தில் தொழில் மிகுந்த பொருளாதாரத்தில் முன்னேறிய கொங்கு பகுதியில் இருந்து இதே குரல் ஒலித்தது கொங்கு நாட்டில் உள்ள வேலை கொங்கு நாட்டவருக்கே மற்றவர்கள் வெளியேறுங்கள் என்று அவர்கள் கூற அதை கொங்கு பகுதி இளைஞர்கள் அனைவரும் பேச துவங்கினர்.

இதையும் படிக்க:  ராமலிங்கம் கொலையை மறைக்க சந்தியா கொலையை கையில் எடுத்துள்ள தமிழக ஊடகங்கள்?

கொங்கு நாட்டில் தான் தமிழகத்தில் உள்ள பெரும் மாநகராட்சிகளில் 4 மாநகராட்சிகள் உள்ளது அதுவும் கோவை , திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தினரும் வேலை செய்கின்றனர்.

அதை தொடர்ந்து கொந்தளித்த மதுரை மக்கள் பாண்டிய நாட்டவரின் வேலை பாண்டிய நாட்டவருக்கே என்று கூற துவங்கினர்.

இதேபோல தான் நெல்லை மக்களும் கூற சற்று நேரத்தில் சமூக வலைத்தளங்களில் தமிழகத்தையே கூறுபோட்டு பிரிந்துவிட்டனர்.

இது தான் சீமான் போன்றவர்களின் ஆசையா , இப்போது தான் மொழி பிரச்சனைகளை மறந்து இந்தியன் என்ற எண்ணத்துடன் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்,

அதில் மீண்டும் 1960 -களில் திமுக செய்தது போல மொழி பிரிவினைவாதத்தை தூண்டி அன்று எப்படி திமுக ஆட்சியை கைப்பற்றியது அதே போல இன்று அரசியல் லாபம் தேட நினைக்கின்றனர்,

இதையும் படிக்க:  இப்போ சந்தோசமா தமிழ் அமைப்புகளே ! மீண்டும் வெடித்தது கலவரம்

இவர்களின் அரசியல் லாபத்திற்காக இவர்கள் பின்னும் சதிவலையில் அப்பாவி இளைஞர்கள் விழுகின்றனர்

மத்திய அரசின் வேலை வாய்ப்பில் தமிழகம் பின்தங்கியுள்ளது என்றால், அதற்காக நாம் நமது கல்வி தரத்தை உயர்த்தவேண்டும் சிபிஎஸ்சி பாட திட்டத்தை மிஞ்சும் ஒரு பாடத்திட்டத்தை தமிழக பள்ளிகளில் உருவாக்க வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு முதல் அதே பாடத்திட்டத்தை கற்பித்து இந்தியாவிலேயே திறன் வாய்ந்த மாணவர்களாக தமிழக மாணவர்களை உருவாக்கினால் வேலைவாய்ப்பில் நிச்சயம் நாம் உயர்வோம்.

அதுபோன்ற ஒரு பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று ஏன் இந்த இயக்கங்கள் போராடுவதில்லை ஏன் என்றால் அதில் இவர்களுக்கு எந்த அரசியல் லாபமும் இல்லை , இப்படி தமிழ் உணர்வை தூண்டி அரசியல் லாபம் அடைவதே இவர்களின் குறிக்கோள் இதில் இளைஞர்கள் சிக்கி சீரழிய வேண்டாம் என்றும் சமூக ஆரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க:  பள்ளிவாசல் முன் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தடை...!

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...