சிதம்பரத்தின் ஊழலை பட்டியல் இட்ட SG. சூர்யா சிவகங்கையில் வைரல் ஆகும் பேச்சு

மாண்புக்குரிய நிதி அமைச்சகத்தை கார்பரேட்டுகளின் கமிஷன் ஆபீசாக மாற்றிய சிதம்பரங்களின் ரகசியங்கள்கார்த்தி சிதம்பரத்தின் ஊழல் ரகசியத்தை புட்டு புட்டு வைக்கும் SG சூர்யா

கார்த்தி சிதம்பரத்தின் மீது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடுக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. வாராவாரம் பெயில் வாங்கி வருகிறார் கார்த்தி. விஞ்ஞான ஊழலுக்கு கருணாநிதி பெயர் பெற்றது போல சிதம்பரமும் அவரது குடும்பமும் ஊழல் செய்வதில் கெட்டிக்காரர்கள்.

அந்த வகையில் ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் சற்று விவரம் அறிந்தவர்களால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் காவேரி டிவி விவாதத்தில் பா.ஜ.க இளைஞரணி துணைத்தலைவரும் பேச்சாளருமான SG சூர்யா தோலுரித்து காட்டியுள்ளார்.

இந்த வீடியோவில் அவர் தெளிவு படுத்தியிருப்பது பின்வருமாறு:

Insert FB Page Post Link – Facebook Post H Raja – https://www.facebook.com/HRajaBJP/videos/344855049468261/

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்கள் இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜி. இந்த இந்நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி கோரி மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் எப்.ஐ.பி.பியிடம் (Foreign investment promotion board) விண்ணப்பிக்கிறது. அதை பரிலீசலித்து ரூ.4.62 கோடி வரை அந்நிய முதலீடு பெற ஒப்புதல் அளிக்கிறது எப்.ஐ.பி.பி. ஆனால், அதை மீறி 10 ரூபாய் முக மதிப்புள்ள(Face value) 14 இலட்சம் பங்குகளையும், மற்றொரு 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளாக 31 இலட்சம் பங்குகளாக சுமார் ரூ.305 கோடி வரை அந்நிய முதலீடு பெறுகிறது ஐ.என்.எக்ஸ் நிறுவனம். அதாவது சந்தை மதிப்பைவிட 86.2 மடங்கு அதிகமான விலைக்கு ஒவ்வொரு பங்கையும் ரூ. 862.31-க்கு மொரீசியசை தலைமையிடமாக கொண்ட நிறுவனங்கள் வாங்குகின்றன.

இதையும் படிக்க:  லயோலா கல்லூரியில் பாரத மாதாவை அவமானபடுத்தி ஓவியம் வரைந்தவனை இங்க அனுப்புங்க….. ராணுவ வீரர்

இதை ஜனவரி 2008-ல் நிதி நுண்ணறிவு பிரிவு (financial intelligence unit) கண்டறிந்து பின்னர் வருமான வரிப்பிரிவு தனது விசாரணையைத் துவக்குகிறது. பின்னர் அமலாக்க துறை விசாரித்து அந்நிய நேரடி முதலீடு நிர்வாக சட்டத்தை மீறியதாக 2010-ல் வழக்கு பதிவு செய்கிறது. 2008-ல் வருமான வரித்துறை விசாரணையை ஆரம்பித்ததும் அப்போதய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அணுகுகிறார்கள் ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தின் முதலாளிகளான இந்திராணி, பீட்டர் முகர்ஜி தம்பதியினர். இதற்கான சந்திப்பு பாம்பே ஹயட் ஹோட்டலில் நடைபெற்றது.

இப்பிரச்சினையை சுமூகமாக முடித்து கொடுப்பதற்காக கமிசன் பெற்றுக்கொண்ட கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தி நிதி அமைச்சக அதிகாரிகள் துணையுடன் இந்திராணி தரப்புக்கு சாதமாக பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறார்.

இதையும் படிக்க:  மோடிக்கு எதிராக 111 - நபர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்பிய அய்யாக்கண்ணு சிக்கலில் மாட்டிய கதை.

அந்நிய முதலீட்டுக்கு புதியதாக ஒரு விண்ணப்பத்தை அனுப்பி அதை நிதியமைச்சகத்தின் மூலம் அனுமதி பெற வைத்து தாங்கள் முன்னர் பெற்ற அந்நிய முதலீட்டுக்கு சட்டபூர்வ அனுமதி பெற்று தந்திருக்கிறார். இதற்கு கைமாறாக பெருமளவிலான் பணம் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கு கைமாற்றியிருக்கிறது. அதாவது மொத்தம் 10 இலட்சம் டாலர்கள் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்த விவகாரத்தில் 1 லட்சம் டாலர்கள் வரை இலஞ்சமாக கார்த்திக் சிதம்பரத்துக்கு Advantage Stragtegic Consulting Private Limited-இன் துணை நிறுவனமான ஹாட்ஸ்ப்ரிட்ஜ் ஹோல்டிங் நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2006 முதல் 2011 வரை மேற்கண்ட நிறுவனங்களில் சுமார் 60 சதவீதம் பங்குகளை பெற்றிருந்த சிதம்பரம் அனைத்து பங்குகளயும் தனது அசொசியேட்டான மோகன் ராஜேஷுக்கு மாற்றியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் மற்றும் கார்த்தியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பாஸ்கர் ராமன், சிபிஎன் ரெட்டி, எம்.ராஜேஷ், ரவி விஸ்வநாதன், பத்மா விஸ்வநாதன் ஆகிய 5 பேர் எழுதிக் கொடுத்த 5 உயில்கள் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்தது. அவர்கள் ஆராய்ந்ததில் மேற்கண்ட 5 பேரும் கார்த்திக் சிதம்பரத்தின் மகள் அதிதி சிதம்பரத்தின்பால் தங்களுக்கு இருக்கும் பற்று, பாச அடிப்படையில் தங்களுக்குண்டான பங்குகளில் 60 சதவீத பங்குகள் தங்கள் அனுபவ காலத்துக்குப் பிறகு அதிதிக்கு செல்லும் வகையில் எழுதி வைத்துள்ளனர். அதே சமயம் தங்கள் பினாமி சொத்துக்கள் போக மற்றைய சொத்துக்கள் தங்கள் உண்மை வாரிசுகளுக்கு செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆக ஐ என் எக்ஸ் மீடியா ஊழல் விவகாரத்தில் சிதம்பரம் குடும்பத்தாருக்கு உள்ள பங்குக்கு உரிய ஆதாரமாக மேற்கண்ட 5 உயில்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்கள் இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜி ஆகியோர் தாங்கள் கமிஷன் அளித்தது, அந்த தொகை எவ்வாறு செலுத்தப்பட்டது என்பது தொடர்பாக மாஜிஸ்ட்ரேsaட்டிடம் பதிவு செய்துள்ள தகவல்கள் போதுமான சாட்சிகளாகும். இந்த சாட்சிகள் அவர்கள் குற்றவாளிகள் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களாக உள்ளன. என்றாலும் இந்த ஊழலின் அனைத்து அம்சங்களையும் சாதாரண மக்களுக்கு மிக சுலபமாக புரிந்துகொள்ள முடியாத வகையில், சிக்கலான ஒன்றாகவும், மிகுந்த விஞ்ஞான முறையில் இந்த ஊழலை சிதம்பரம் அண்டு சன்ஸ் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:  வெளியானது பாராளுமன்ற தேர்தல் மற்றும் 21 தொகுதி இடைத்தேர்தல் அட்டவனை , தமிழகத்தில் எப்போது தேர்தல் என்று தெரியுமா?
Loading...