சாதிக்கலவரம் அறிக்கை வெளியிட்ட H ராஜா இதனால்தான் இவரை திராவிட கட்சிகள் எதிர்கின்றனரா?

பாஜக தேசிய செயலாளர் H. ராஜா எப்போதும் தனக்கு எது சரியென படுகிறதோ எந்த தயக்கமும் இன்றி தனது கருத்தினை வெளிப்படையாக பேசுபவர் அந்தவகையில் அவர் கூறிய கருத்துக்கள் பல நேரங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

திருமாவளவன் சில குறிப்பிட்டசாதிகளை சேர்ந்தவர்களை சரக்கு, மிடுக்கு என்று பேசியபோது முதல் நபராக கண்டித்தவர் H ராஜா, அதே நேரத்தில் தேனியில் தலித்துகளின் வீடுகள் இஸ்லாமியர்களால் சூறையாடப்பட்ட போது, திருமாவளவன் கண்டிக்காத முன்பே களத்திற்கு சென்றவர் H. ராஜா.

மேலும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ராமலிங்கம் படுகொலையின்போது நேரடியாக வீட்டிற்கு சென்று ஆறுதல்கூறியதுடன், உதவிகளையும் செய்தவர் ராஜா.

அந்தவகையில் சிலர் வேண்டுமென்றே தங்கள் அரசியல் லாபத்திற்காக ஒருசமூகம் குறித்து தவறாக பேசிய இரு நபர்களை கடுமையாக கண்டித்துள்ளார்.

இதையும் படிக்க:  காணல் நீராய் போனது காங்கிரஸ் வெற்றி கனவு

அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-

20/04/2019
பத்திரிக்கை செய்தி …

முத்தரையர் சமுதாயத்தைப் பற்றியும் குறிப்பாக முத்தரையர் சமுதாய பெண்களை மிக கேவலமாக இழிவுபடுத்தியும் சில தீய சக்திகள் பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வெகுவேகமாக பரவி வருகின்றது.

ஒரு குறிப்பிட்ட நலிந்த சமுதாயத்துக்கு எதிராக சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில், வாட்ஸப் பதிவில் மிகவும் அவதூறாகவும் கொச்சையாகவும் பேசிய அந்த சமூகவிரோதிகள் மீது காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும்.

ஆனால் 48 மணி நேரம் கடந்த பின்பும் சம்பந்தப்பட்ட, இந்தக் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்ட அந்த சமூகவிரோதிகள் காவல் துறையினரால் கைது செய்யப்படாதது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது.

இதையும் படிக்க:  நடிகர் ரஜினிகாந்த்தை தலைவர் என்று சொல்பவர்களை சாகடிக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ள சீமான்!

இந்தக் கீழ்த்தரமான ஆடியோவால் உணர்வுரீதியாக பாதிக்கப்பட்ட அந்த சமுதாய மக்களின் இதயங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவளிப்பது தற்போது மிக முக்கியமான ஒன்று.

இந்த சமுதாய மக்களின் அமைதியான சட்டபூர்வமான போராட்டங்களுக்கு நம்முடைய ஆதரவு எப்பொழுதும் உண்டு.

ஆனால் அனைவரும் இந்த சமூகவிரோதிகளின் சூழ்ச்சியை உணர்ந்து, நம் மக்கள் அறவழியில் போராட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசும் தமிழக காவல்துறையும் இந்த மக்களுக்கு ஏற்பட்ட மன ரீதியான காயத்திற்கு மருந்திடும் வகையில் இந்த சமூக விரோதிகள் மீது விரைவான உறுதியான நடவடிக்கையை எடுத்து, சமூகவிரோதிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் நம்புகிறேன்.

என்றும் தாயக பணியில்
H.ராஜா.
பாஜக தேசிய செயலாளர்.
சிவகங்கை பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளர்.

இதையும் படிக்க:  ஒரு தலைக்கு ரெண்டு தலை கீழே விழும் எல்லையில் நுழைந்த தீவிரவாதிகளை போட்டுத்தள்ளிய பின்பு ராணுவ தளபதி பேட்டி !

இவ்வாறு எந்த சமுதாயத்தினர் பாதிக்கப்பட்டாலும் முதலில் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பதால் அவரை சாதியை கடந்து பலரும் நட்பு பாராட்டி வருகின்றனர்.

இந்துக்களுக்குள் சாதி சண்டையை உருவாக்கி அதன் மூலம் திராவிட கட்சிகள் தங்களுக்குள் அரசியல் லாபம் அடைவதாக பலரும் குற்றசாட்டுகளை முன்வைத்து வந்தனர். இந்த சூழலில் இந்துக்களில் எந்த சமூகத்தினருக்கு பாதிப்புகள் வந்தாலும் உடனடியாக குரல் கொடுத்து அவர்கள் ஒற்றுமையை நிலை நாட்டுவதால்தான் திராவிட மற்றும் பெரியாரிஸ்ட்கள் இவரை கடுமையாக எதிர்பதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

©TNNEWS24

Loading...