அமிட்ஷா பேரணியில் திட்டமிட்டபடி கலவரத்தை உண்டாக்கிய மம்தா ! மம்தா வீட்டை சூறையாட கிளப்பிய பாஜகவினர் ! கொல்கத்தா கிளப்பிய பாஜக முதல்வர்கள் கடும் பதற்றம்

கொல்கத்தா.,

மேற்குவங்கத்தில் திரிணமூல் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையேயான மோதல் மிக பெரிய போராட்டத்தில் முடிந்துள்ளது, கொல்கத்தாவில் சட்டம் ஒழுங்கு தகர்த்து எறியப்பட்டுள்ளது.

பாஜக தலைவர் அமிட்ஷா இன்று மேற்குவங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், ரோட்ஷோவிற்கும் அனுமதி வாங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அமைதியான முறையில் சென்று கொண்டிருந்த அமிட்ஷா பேரணி, கொல்கத்தா கல்லூரியை அடையும்போது, அங்கு திரண்டிருந்த திரிணமூல் கட்சியினர் பாஜக தலைவர் அமிட்ஷா வாகனத்தை நோக்கி கற்களை வீச ஆரம்பித்தனர்.

இதனால் பதிலுக்கு பாஜக தொண்டர்களும், கற்களை வீச அந்த இடமே கலவர பூமியாக மாறியிருக்கிறது, தற்போது வரை அதிகமான காவலர்கள் குவிக்கப்பட்டு இரண்டு தரப்பினரையும் வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க:  தீவிரவாதியை அடித்தால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது , கிழித்தெடுத்த மோடி

முன்பே மம்தா அமிட்ஷா பேரணிக்கு வழங்கிய அனுமதியை தடுத்த மம்தா பானர்ஜி இப்போது திட்டமிட்டு கலவரத்தை உண்டாகியிருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மேற்குவங்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான், மம்தா பானர்ஜியை கடுமையாக கண்டித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்திருப்பது பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பாஜக முதல்வர்கள் கொல்கத்தா நோக்கி வர இருப்பதால் மம்தா பானர்ஜி கடுமையான பதற்றத்தில் இருப்பதாகவும், கூறப்படுகிறது. தற்போது பாஜகவினர் மம்தா இல்லத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

©TNNEWS24

5செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  மோடி நிரந்தர பிரதமர் ஆகிவிடுவார் -அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
Loading...