பிரியங்கா காந்தி முன்னிலையில் கல்லூரி மாணவிமீது தாக்குதல் வெளியில் சொல்லாமல் மூடி மறைக்கும் ஊடகங்கள் !

பிரியங்கா காந்தி முன்னிலையில் கல்லூரி மாணவிமீது தாக்குதல் வெளியில் சொல்லாமல் மூடி மறைக்கும் ஊடகங்கள்

வாரணாசி

பிரியங்கா காந்தியின் பேரணி நடைபெற்ற இடத்தில் ‘மீண்டும் மோடி’ என்பதைக் குறிக்கும் டிசர்ட் அணிந்து சென்ற கல்லூரி மாணவி தாக்கப்பட்டது நாடு முழுவதும் பாஜகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு பகுதி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரப் பேரணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியே கல்லூரி மாணவி ஒருவர் ‘NAMO AGAIN ‘ எனும் டிசர்ட் அணிந்து சென்றார். அப்போது அப்பெண் மீது காங்கிரஸ் கட்சியினர் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலானது ப்ரியங்காவின் கண் எட்டும் தூரத்தில்தான் நடைபெற்றுள்ளது.

இதையும் படிக்க:  விஜய்யுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தியை காரி துப்பும் ஊடகங்கள்

நான் பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் அல்ல என்றும் மோடியின் ஆதரவாளர்தான் என்றும் அப்பெண் பதிலளித்தபோதும் தாக்கப்பட்டது அப்பகுதியில் உள்ள மோடி ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி தாக்கப்பட்ட விஷயம் தெரியவந்ததும், ஆங்காங்கே மானவர்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் ராகுல் காந்தி கல்லூரி மாணவிகளிடையே நடந்த கலந்துரையாடல் குறித்து விடிய விடிய ஒளிபரப்பிய தமிழக ஊடகங்களுக்கு கல்லூரி மாணவி தாக்கப்பட்ட செய்தியை சொல்ல நேரம் இல்லையா எனவும் விமர்ச்சித்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...